Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, May 21, 2011

வாக்குறுதி கொடுத்த வாஜ்பாய்! வறுமையில் மாணவன்?

புதுச்சேரி மாநிலம் செல்லிப்பட்டு, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் குப்புராமன் (26). கடந்த 1998ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். மாணவர் குப்புராமன் விடுமுறை நாளில் மாடு மேய்ப்பது வழக்கம்.

கடந்த 1998ம் ஆண்டு விடுமுறை நாளில் குப்புராமன் ஆற்றங்கரையோரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, சங்கராபரணி ஆற்றில் குளிக்க சென்ற அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதைக் கண்ட குப்புராமன் துணிச்சலாக ஆற்றில் குதித்து மூன்று சிறுமிகளையும் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தான். இதற்காக அவருக்கு கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி "வீரதீர செயல் விருது' டில்லியில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் கையால் வழங்கப்பட்டது. சிறுவன் குப்புராமனின் அசாத்திய திறமைக்காகவும் வீரதீர செயலுக்கான விருது பெற்றதற்காகவும் அவருக்கு புதுச்சேரி அரசு வேலை தருவதாக உறுதியளித்தது. 10ம் வகுப்பு வரை படித்த குப்புராமன் மேலே படிக்காமல் பள்ளியை விட்டு நின்றான்.

கால ஓட்டத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. வீரதீர சாதனை புரிந்த சிறுவனுக்கு இன்று 26 வயதாகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை சிறுவனின் படிப்பைப் பாதித்து, அவனது வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது. விளைவு... தற்போது செல்லிப்பட்டு பகுதியில் செங்கல் சூளையில் அவர் கூலி வேலை செய்யும் அவல நிலை அரங்கேறியுள்ளது. அன்று சாதனை புரியும் போது, சிறுவனைப் பாராட்டி மகிழ்ந்த அரசு, அதன் பிறகு அவரைக் கண்டு கொள்ளவே இல்லை. வறுமையின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ள குப்புராமன்.

மூன்று சிறுமிகளைக் காப்பாற்றிய போது, முத்திரையர்பாளையத்தைச் சேர்ந்த எனது ஆசிரியர் ஸ்ரீராம், நான் விருது பெறுவதற்கு காரணமாக இருந்தார். நான் 18 வயதைத் தாண்டிய போது, கல்வித்துறை இயக்குனராக இருந்த ராகேஷ் சந்திரா எனக்கு அரசு வேலைக்குப் பரிந்துரை செய்தார். பல முறை தலைமைச் செயலத்திற்குச் சென்று திரும்பிய அந்த "கோப்பு' தற்போது எங்கிருக்கிறது என்றே தெரிய வில்லை என்றார். குப்புராமனுக்கு அரசு வேலை வழங்குவதற்காக அனுப்பப்பட்ட கோப்பைக் கண்டெடுத்து தூசி தட்டி நடவடிக்கை எடுக்குமா ரங்கசாமி தலைமையிலான அரசு?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!