Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, May 29, 2011

மக்களின் (வாக்காளரின்) நாடி துடிப்பை அறிந்திருக்கும் ஜெயா!

கடந்த 1989ல், தேர்தலுக்கு பிறகு நடந்த ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் 1977, 1980 மற்றும் 1984ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில், தொடர்ந்து எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்று முதல்வராக 10 ஆண்டுகள் இருந்தார். அதற்கு பிறகு 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அதிக இடங்களை பிடித்து கருணாநிதி முதல்வரானார். பின் 1991ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். 1996ல் நடந்த தேர்தலில், மீண்டும் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று கருணாநிதி முதல்வரானார்.

தொடர்ந்து 2001ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ், பா.ம.க., கூட்டணியுடன் அ.தி.மு.க., அதிக இடங்களை பிடித்து ஜெயலலிதா முதல்வரானார். 2006 தேர்தலில், மீண்டும் தி.மு.க., ஆட்சியை பிடித்து கருணாநிதி முதல்வரானார். 2011 தேர்தலில், மீண்டும் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஜெ., முதல்வராக பொறுப்பேற்று உள்ளார். இவ்வாறு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடைமுறை தமிழகத்தில், கடந்த 22 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

இந்த வரலாறு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடரும் என்பதை காலம் உணர்த்தும். மறைந்த எம்.ஜி.ஆருக்கு பிறகு யாரும் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்தது இல்லை என்ற வரலாறும் நீடிக்கிறது. இதேபோன்ற பெருமை, அண்டை மாநிலமான கேரளாவுக்கும் உண்டு.

கேரளாவில் 1957ல், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதல்வராக இருந்த காலத்தில் இருந்து, அம்மாநில மக்கள் ஆட்சியை மாற்றி மாற்றி கொடுத்துள்ளனர். 1969-70 மற்றும் 1970-77ம் ஆண்டுகளில் சி.அச்சுதமேனன் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்துள்ளார். 1981-82 மற்றும் 1982-87ம் ஆண்டுகளில், கருணாகரன் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்துள்ளார். இவை மட்டுமே விதிவிலக்காக உள்ளன. மற்ற தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநில மக்களின் வரலாறாக இருந்து வருகிறது.

மக்களின்(வாக்காளரின்)நாடி துடிப்பை அறிந்திருக்கும் ஜெயா! புரிந்து நடந்து கொண்டால் மீண்டும் வெற்றி நிச்சயம். இல்லையேல் மஞ்சள் துண்டு கதைதான் உனக்கும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!