Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, May 16, 2011

சாக்கடையில் கால் பதித்து கழுத்தை மாட்டிக்கொள்ளபோகும் தளபதி!

சட்டசபை தேர்தலில் அதிமுக., கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அதிமுக.,வுக்கு ஆதரவாக விஜய்யின் மக்கள் இயக்கமும் செயல்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஜெயலலிதாவை விஜய்யும், அவரது அப்பாவும், இயக்குநருமான எஸ்.‌ஏ.சந்திரசேகர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய், இந்த தேர்தலில் அதிமுக., வெற்றி பெறும் என்பது எனக்கு முன்பே ‌தெரியும், ஆனால் இந்தளவுக்கு வெற்றி பெறும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. தேர்தலில் அதிமுக.,வுக்கு ஆதரவாக எனது ரசிகர்கள் செயல்பட்டது மிகழ்ச்சியளிக்கிறது.

இந்த நேரத்தில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். முழுநேர அரசியலில் களமிறங்குவீர்களா என்ற கேட்டதற்கு, விரைவில் நான் அரசியலில் அடியெடுத்து வைப்பேன். நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆனால் அதற்கான நேரமும், காலமும் இதுவல்ல என்று கூறினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!