காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட், வணிக வளாகம், துணிக்கடைகள், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில், பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகளை கையில் வைத்தபடி பிச்சை எடுப்பது, அதிகமாக உள்ளது.
பிச்சை எடுக்கும் இந்த பெண்கள் வைத்திருக்கும் குழந்தைகள், எப்போதும் பசி மயக்கத்தில் தூங்கிக் கொண்டே இருக்கின்றன. கையில் ரப்பர் பொருளை வைத்திருப்பது போல், குழந்தையை தொங்க விட்டபடி இந்த பெண்கள் பிச்சை எடுக்கின்றனர். கும்பலாக வரும் இந்த பெண்கள், வணிக வளாகத்திற்கு வருபவர்களை தொடர்ந்து சென்று, குழந்தையைக் காட்டி பிச்சை கேட்கின்றனர். பொதுமக்களும் இரக்கப்பட்டு பிச்சை போடுகின்றனர். இப்பெண்களிடம் உள்ள குழந்தைகள் குறித்து விசாரித்த போது, பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
இந்த கும்பல், தமிழகப் பகுதியான ஆக்கூரில் தங்கி, அங்கிருந்து பஸ் மூலம் காரைக்கால் வருவதாகவும், குழந்தைகளை, தங்கள் உறவினர்களிடம் நாள் வாடகைக்கு வாங்கி, பிச்சை எடுப்பதாகவும் தெரிகிறது. குழந்தைகளுக்கு, ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு மட்டும், தண்ணீர் கொடுக்கப்படுகிறது. இக்கொடுஞ்செயலைத் தடுக்க, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்., சம்பத்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா.
0 comments :
Post a Comment