ஈழத் தமிழர்கள் படுகொலை பற்றிய ஐ.நா.குழுவின் அறிக்கையும் மத்திய அரசின் கடமையும் என்னும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் 6.05.2011 அன்று மாலை 6 மணியளவில் மதுரை சின்னக் கடைத்தெரு பள்ளி வாசல் அருகில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இலங்கையில் நடைபெற்றது ஒரு இனத்தின் மீது இன்னொரு இனம் தொடுத்த போர். ஹிட்லரை விட பெரிய கொடுங்கோலன் ராஜபச்சே!
ஐ.நா.சபையால் அமைக்கப்பட்ட குழுவின் அடிப்படையில் ராஜபக்சே போர்க்குற்றவாளி எனும் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும. மதுரையில் தமிழ் ஈழ மாநாட்டை முதன் முதலில் திராவிடர் கழகம் நடத்தியது.
அன்று முதல் இன்று வரை தமிழ்ஈழம்தான் தீர்வு என்பதில் தெளிவாக இருக்கிறோம். தமிழ் ஈழம்தான் தீர்வு என் பதை மத்திய அரசு ஏற்க வேண்டிய கட்டாயம் வரும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு இலங்கைப் பிரச்சினையிலே ஒரு தெளிவு இருந்தது. ஆனால் அதற்குப் பின்னால் வந்தவர்களுக்கு அந்தத் தெளிவு இல்லை. இனப் படுகொலை எப்படி நடத்தப்பட்டது என்பதை ஐ.நா.சபையால் அமைக்கப்பட்ட குழு விரிவாக எடுத்துரைத்திருக் கிறது.
இந்திய அரசு கவனத்தில் எடுத்தாக தெரியவில்லை. எடுக்க வைக்க நாம் தமிழர்கள் ஒன்றிணைவோம். கருநாடகத்தில், கேரளத்தில் பொதுவான பிரச்சினைகளில் எல்லோரும் கட்சிகளை மறந்து ஒன்றிணைகின்றார்கள். ஆனால் இங்கு இழவு வீட்டிற்கு கூட ஒன்றாகப் போவதில்லை. அரசியல் அந்தப்பாடு படுத்துகிறது. தமிழ் ஈழமே தீர்வு என்பதில் ஒன்றிணைந்து வரும் கட்சிகளோடு சேர்ந்து பேச நாங்கள் தயார். ஜாதி, மத, அரசியல் மறந்து ஈழத் தமிழர்களின் துயர் நீக்க ஒன்றிணைவோம் என்றார்.
0 comments :
Post a Comment