Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, May 13, 2011

தேர்தலில் தோல்வி அடைந்தும் தொடரும் கூட்டணி?

புது தில்லி : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வியடைந்ததன் காரணமாக, திமுக- காங்கிரஸ் உறவு பாதிக்காது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத் தேர்தல் முடிவுகள் குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றதற்குக் காரணம், திமுகவுடனான கூட்டணியா அல்லது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடா என கேட்கிறீர்கள்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தனியாகப் போட்டியிட்டது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் அக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.

இதையடுத்து தேமுதிகவின் வாக்குகள், அதிமுகவுக்கு கிடைத்ததால் அக்கூட்டணிக்கு வெற்றி கிடைத்ததா அல்லது அவர்களது வெற்றிக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்பதை நாங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும். திமுகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டதா என்பது குறித்து ஆலோசிக்க இது சரியான தருணம் அல்ல.

தமிழகத்தில் நடந்த ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் தற்போது மாற்றத்தை ஏற்படுத்தவே வாக்களித்திருக்கின்றனர். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வது என்பது தமிழகத்தில் சிரமமான ஒன்று. இதையும் நாம் மனதில் கொள்ளவேண்டும்.

இந்தத் தேர்தல் தோல்வியால், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படுமா எனக் கேட்கிறீர்கள். எங்களது கூட்டணி இதுவரை ஸ்திரமாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் திமுகவுடன் கூட்டணி அமைத்து நாங்கள் பல தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறோம். பல வெற்றிகளையும் பார்த்திருக்கிறோம். தற்போது தோல்வியைச் சந்தித்துள்ளோம். இப்போதைய சூழலில் எங்களது கூட்டணியில் எவ்வித மாற்றமும் இல்லை. அது தொடரும் என்றார் அவர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!