ஹூஸ்டன் : அமெரிக்கா கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சமீபத்தில் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி நடந்தது.
இதில், 65 நாடுகளை சேர்ந்த இளம் மாணவர்கள், தொழில் முனைவோர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். கண்காட்சியில் இந்தியாவில் இருந்து பங்கேற்ற ஒன்பது பேர், தங்கள் துறைகளில், தாங்கள் கண்டறிந்தவற்றை காட்சிக்கு வைத்தனர். இப்போட்டியில், ஒவ்வொரு துறையிலும் மிகச்சிறந்தவர்கள் என, மொத்தம் 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சென்னையின் புனித ஜான்ஸ் சர்வதேச உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த ராகவேந்திரா ராமச்சந்திரன் (வயது 16), வேதியியல் துறையில் மருந்து தயாரிப்பில் முதல் பரிசான 4 லட்சத்து 5,000 ரூபாயை (9,000 டாலர்) வென்றார். புற்றுநோய், பாக்டீரியா மற்றும் பூஞ்சையை குணப்படுத்தும் மருந்துகள் தயாரிப்பில், இவரது கண்டுபிடிப்பு மேலும் பல முன்னேற்றங்களைக் கண்டறிய உதவும்.தன் ஆய்வுக்காக, ஓராண்டு பள்ளி படிப்பையே தான் இழந்ததாக ராகவேந்திரா கூறியுள்ளார். இப்போட்டியில் பங்கேற்ற ஒன்பது இந்திய மாணவர்களில் பெரும்பாலோர், ஏதேனும் பரிசு அல்லது விருதினை வென்றுள்ளனர்.
0 comments :
Post a Comment