Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, May 15, 2011

டெல்லி பயணம் ஜெயா, காலை பிடிக்கபோவது யார்?

சோனியா காந்திக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் 2001 சட்டப்பேரவைத் தேர்தல் இருந்த உறவில் பின்னர் விரிசல் ஏற்பட்டது. வெளிநாட்டில் பிறந்தவரான சோனியா பிரதமர் ஆகக் கூடாது என்று ஜெயலலிதா கடுமையாக ஆட்சேபித்திருக்கிறார். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதை வலியுறுத்தி பிரசாரம் செய்தார்.

ஆனால், சிறிது காலம் கழித்து, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 60 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்பு தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்றார். அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் விடுத்த அழைப்பின் பேரில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் சோனியாவுடன் சில கணங்கள் சந்திப்பு ஏற்பட்டது. அப்போதே, அரசியல் மாற்றம் குறித்து சில யூகங்கள் ஏற்பட்டன.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையில் ஒரு கட்டத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பிரச்னை ஏற்பட்டபோது, மத்திய அரசிலிருந்து விலகுவதாக திமுக அச்சுறுத்தியது.

அந்த சமயத்தில் மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொள்ளும் பட்சத்தில், அதிமுக ஆதரவு அளிக்கும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். தற்போது தில்லியில் இருவருக்கும் இடையில் நடைபெற உள்ள சந்திப்பில் இது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்படுமா எனத் தெரியவில்லை.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்த பின் உலகெங்கும் பரவியுள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள், வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்த தமிழர் அமைப்பினர் இணைந்து நாடு கடந்த தமிழீழம் அமைத்துள்ளனர். அந்த அமைப்பின் குழு ஈழத் தமிழரின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஜெயலலிதாவுடன் விவாதிக்க இருப்பதாகவும் தெரிகிறது. அதைப் போல் தமிழ்த் தேசியக் கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி தலைமையிலான குழுவும் ஜெயலலிதாவை சந்திக்கத் திட்டமிட்டுள்ளது.

டெல்லி சென்று யார் காலை யார் பிடிப்பார்கள் போறுத்திருந்து பார்ப்போம்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!