மதுரை : இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில் (இக்னோ) பட்டப்படிப்புக்கான ஆயத்தப்படிப்பை தமிழ்வழி பயிற்று மொழியாக அனுமதித்து, ஜூலை முதல் மாணவர் சேர்க்கையை அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது.
எந்த அடிப்படை கல்வித் தகுதியும் இல்லாதவர்கள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், உயர் கல்வியில் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்பு பெற, இக்னோ பல்கலை ஆயத்தப் படிப்பை அடிப்படை தகுதியாக நடத்தி வருகிறது. இது ஆறுமாத கால படிப்பு. இதன்பின் 3 ஆண்டு பட்டப் படிப்பை இக்னோவிலேயே தொடரலாம். அவர்கள் மேலும் 2 ஆண்டு முதுநிலை பட்டத்தையும் தொடரலாம். இதை, தொலைநிலைக் கல்வி குழுமம் (டிஸ்டன்ஸ் எஜுகேஷன் கவுன்சில்) அங்கீகரித்துள்ளது.
பல்வேறு தரப்பினரும் பயன்பெறும் வகையில் இப்படிப்பின் தேவையை உணர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா மொழிகளில் வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பாடநூல்களை மொழி பெயர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. மதுரை மண்டலம் இப்பணியை முடித்துவிட்டது. வரும் ஜூலை முதல் இப்படிப்பை தமிழ் வழியில் வழங்க துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment