Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, May 14, 2011

மலிந்து கிடக்கும் தேச பக்தி! மலிய போகும் தேசிய நலன்??

சமீபத்தில் மத்திய பிரதேச நீதிமன்றம் ஒன்றில் ஆஜராகி விட்டு வந்த சாத்வி பிரக்யா சிங் சில உளறல்களை கொட்டி தீர்த்தார். நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு சோனியா காந்தி, திக் விஜய் சிங், ஹேமந்த் கர்கரே போன்றோர் தான் காரணம் என்று கூறிய அவர் இறுதியாக ஒரு வாக்கியத்தையும் கூறினார், ‘நான் உண்மையான தேசபக்தை’.

பிரக்யா சிங்கை பற்றி பெரிய அளவில் முன்னுரை ஒன்றும் தேவையில்லை. மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி. அத்துடன் பல குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்த சுனில் ஜோஷியின் கொலையில் பங்கு இருப்பதாகவும் சொல்லப்படுபவர். ஜோஷியின் கொலை வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வரும் போது தான் இந்த தத்துவங்களை உதிர்த்துள்ளார் இந்த பெண் சாமியார்.

சங்பரிவார்களின் கடைசி புகலிடம் இந்த தேசபக்தி வேஷம் தான் என்பதை நாம் நன்கறிவோம். கொலை, கலவரம், இனப்படுகொலை, ஊழல், தேசதுரோகம் என அனைத்தையும் செய்துவிட்டு ‘பாரத் மாதா கி ஜேய்’ என்றும் ‘வந்தே மாதரம்’ என்றும் கூச்சலிட்டு அனைத்தையும் மறைப்பதில் இவர்கள் வல்லவர்கள்.

சங்பரிவார் கூடாரத்தில் நன்கு தேர்ச்சி பெற்று அப்பாவிகளை குண்டு வெடிப்புகளில் கொலை செய்த சாத்வி பிரக்யாவும் அதே வழிமுறையை பின்பற்றுவதில் அதிசயம் ஏதும் இல்லை.

இந்த கூட்டத்தின் தேசபக்திக்கு சவப்பெட்டி ஊழல் நல்லதொரு உதாரணம். நாட்டிற்காக உயிர் நீத்த படை வீரர்களின் பிரேதத்திலும் பணம் பார்த்த கும்பல்தான் இது. அதே போல் இவர்களின் தீவிரவாத செயல்களை எவரேனும் வெளியே கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்ளும் போதெல்லாம் இதே தேசபக்தி கோஷம் போட்டு தப்பித்துக் கொள்வார்கள்.

தேசபக்தி கோஷம் போடும் அதே சமயம் மற்றவர்களை தேச துரோகிகளாகவும் சித்தரிப்பார்கள். மும்பை தாக்குதல் நடைபெற்ற போது பாராளுமன்றத்தில் அது குறித்து கேள்வி எழுப்பிய ஏ.ஆர்.அந்துலேவை எதிர்க்க இதே வழிமுறையை தான் பின்பற்றினார்கள்.

தேசபக்தி என்று சங்பரிவார்கள் கூச்சலிடும் போது நாம் மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் எந்த தேசத்தின் பக்தியை குறிப்பிடுகிறார்கள்? நிச்சயமாக இவர்கள் குறிப்பிடும் தேசம் இந்தியா அல்ல. குண்டு வெடிப்புகளில் சங்பரிவாரின் பங்கு வெளிவந்த போது மற்றொரு உண்மையும் வெளிப்பட்டது. ‘அகண்ட பாரதம்’ என்ற இவர்களின் கனவு தேசத்தை வடிவமைக்கவும் அதனை நிர்வகிக்கவும் இந்த இந்துத்துவா தீவிரவாதிகள் முயற்சித்து வருகின்றனர் என்ற உண்மைதான் அது.

இதற்கு எதிராக நிற்கும் எவரையும் இவர்கள் தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அது சங்பரிவார் தலைவர்களாக இருந்தாலும் சரியே!!!. இந்திய தேசத்திற்கு எதிராக மற்றொரு தேசத்தை உருவாக்க விரும்பும் இவர்களின் தேச பக்தி எந்த பக்கம் இருக்கும் என்பது இப்போது அனைவருக்கும் நன்றாக விளங்கியிருக்கும்.

நாம் இவ்வாறு சொல்வதால் ஏதோ சங்பரிவார்கள் மட்டும் தான் இந்த தேசபக்தி வேஷத்தை பயன்படுத்துகின்றனர் என்றில்லை. ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் முதல் தேசத்தை அடமானம் வைக்கும் கார்பரேட் முதலாளிகள் வரை அனைவருக்கும் இந்த தேசபக்தி முகமூடி நன்றாக பயன்படுகிறது.

அதிலும் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் சில வார்த்தைகளை பகிர்வதன் மூலமே இவர்கள் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தலாம். பாலிவுட் ஸ்டார்கள் முதல் கலாச்சார சீரழிவை முன்னின்று நடத்திய லலித் மோடி வரை இதற்கு விதிவிலக்கல்ல.

அனைவரும் பயன்படுத்தும் இந்த முகமூடியை சாமான்யர்கள் சும்மா விடுவார்களா? விலைவாசி விண்ணை தொடும் நமது நாட்டில் தற்போது மலிவு விலையில் கிடைப்பது இந்த தேசபக்தி மட்டும்தான்.

நாட்டு நலனில் அக்கறை கிடையாது, நாட்டில் என்ன நடந்தாலும் கவலை கிடையாது, ஊழலும் தீவிரவாதமும் தலைவிரித்து ஆடினாலும் கவலை கிடையாது…நான், என் குடும்பம் என்ற சுயநலம்தான்…பின்னர் எப்படி தேசபக்தியை வெளிப்படுத்துவார் இந்த காமன்மேன்?

ரொம்ப ஈஸி…கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது இந்தியாவின் கொடியை அசைத்து கொண்டு ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரத்தை வாய் கிழிய கத்தினால் போதும், இவர்களுக்கு தேசபக்தன் பட்டம் கிடைத்து விடும்.

இவர்களிடம் மாட்டிக்கொண்டு அந்த தேசிய கொடி படும்பாடு வேறு கதை. அதுவும் நடைபெறுவது இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றால் தேசபக்தி இருநூறு மடங்கு அதிகரித்து விடும். இதுதான் நமது நாட்டின் தேசபக்திக்கான அளவுகோல்! உயர்ந்து பறக்கும் போலித்தனத்தில் கிழிந்து தொங்கும் தேசபக்தி!!

ஏர்வை ரியாஸ்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!