புதுடில்லி : உலகின் மிககுறைந்த விலைக்காரான டாடா மோட்டார் நிறுவனத்தின் நானோ கார், வரும் ஜூன் மாதம் முதல் இலங்கை சாலைகளில் ஓட உள்ளது.
ஆரம்பித்த புதிதில், அனைவரும் விரும்பும் வாகனமாக இருந்த நானோ, அதில் உள்ள குறைபாடு, திடீரென்று தீப்பிடித்தது உள்ளிட்ட காரணங்களினால் அதன் மீதான மதிப்பு மற்றும் விற்பனை ஆட்டம் காண துவங்கியது. மாதத்திற்கு 500 கார்கள் மட்டுமே விற்பனை என்ற இக்கட்டான நிலைக்கு நானோ கார் தள்ளப்பட்டது நினைவிருக்கலாம். இதன்பின், பல அதிரடி சலுகைகளை அறிவித்தது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். புதிதாக கார் வாங்குபவர்களுக்கு 4 ஆண்டுகால பராமரிப்பு கட்டணம் இலவசம் என்று முதலில் அறிவித்த டாடா நிறுவனம், பின், பழைய கார்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என அறிவித்தது.
இதன்பின்னர், நானோ காரின் விற்பனை கணிசமாக உயர துவங்கியது. உலகின் மிகக்குறைந்த விலை கார் என்று பெயர் எடுத்த நானோ கார், இந்தியாவில் மட்டும் ஓடுவது சரியில்லை என்றும், சர்வதேச நாடுகளிலும் நானோ கார் ஓடும் வகையிலான முடிவை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எடுத்தது. இதன் ஒருபகுதியாக, நானோ காரை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்கு நானோ காரை ஏற்றுமதி செய்த டாடா நிறுவனம், வரும் ஜூன் மாதம் முதல் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, 500 கார்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும், பின், கார்களின் எண்ணிக்கையை மாதத்திற்கு 200 என்ற அளவில் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment