Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, April 10, 2011

அடித்தது அதிஷ்டம்! தெலுங்கு ஹீரோவுக்கு!!

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பவன் கல்யாண், ஆக்ஷன் மற்றும் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். சினிமாவில் அறிமுகமான நாள்முதல் இதுநாள்வரை முத்தக்காட்சியில் அதுவும் லிப் டூ லிப் காட்சிகளில் நடித்தது கிடையாதாம் பவன் கல்யாண். ஆனால் இப்போது அதுவும் த்ரிஷா மூலம் நிறைவேறி விட்டது.

இந்தியில் வெளிவந்த லவ் அஜ் கல் படம் ‌தெலுங்கில் தீன்மார் என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. படத்தில் நாயகனாக பவன் கல்யாணும், நாயகியாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பொதுவாக ரொமான்ஸ் சீன்களில் சகநடிகையுடன் நடிக்கும் போது சற்று கூச்சப்படுபவர் பவன் கல்யாண். இந்நிலையில் படத்தில் த்ரிஷாவுக்கு, பவன் கல்யாண் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது போன்ற காட்சி ஒன்றை வைத்திருக்கிறார் இயக்குநர் ஜெயந்த் சி.பரன்ஞ்சி. ஆனால் இதில் நடிக்க முதலில் மறுத்து இருக்கிறார் பவன் கல்யாண்.

பின்னர் இயக்குநர் வந்து லவ் அஜ் கல் படத்தில் இதுபோன்ற ஏகப்பட்ட முத்தக்காட்சிகள் இடம்பெறுகிறது. ஆனால் நம்முடைய படத்தில் அவ்வளவு காட்சிகளை வைக்க முடியாது என்றும் தெரியும். அதனால் தான் ஒரே ஒரு காட்சியை மட்டும் வைத்திருக்கிறேன். இந்த ஒரு காட்சி படத்திற்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது என்று வற்புறுத்தியிருக்கிறார். இயக்குநர் இவ்வளவு சொல்லியும் நாம் நடிக்காவிட்டால் நன்றாக இருக்காது என்று கருதி, த்ரிஷாவுக்கு லிப் டூ லிப் ஹிஸ் கொடுத்து இருக்கிறார் பவன் கல்யாண்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!