ஈரோடு : அ.தி.மு.க.,வுக்கு நடிகர் விஜய் ஆதரவளித்ததை கண்டித்து, ஈரோட்டில் 27 விஜய் கிளை ரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட்டன. அடையாள அட்டை, பதிவு சான்றிதழ் ஆகியவை எரிக்கப்பட்டன.
நடிகர் விஜய் ரசிகர் மன்றங்கள், "விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் இயங்கி வருகின்றன. "வரும் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, "விஜய் மக்கள் இயக்கம்' செயல்படும்' என, சமீபத்தில் நடிகர் விஜய், அவரது தந்தை சந்திரசேகர் பெயரில் அறிவிப்பு வெளியானது. திடீரென அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை எதிர்த்த, அகில இந்திய தலைவர் ஜெயசீலன், உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஜெயசீலனின் ஆதரவாளர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு, ஜெயசீலன் நீக்கம் ஆகிய காரணங்களால் ஈரோடு மாநகர விஜய் இளைஞர் அணி மன்றம் உள்பட 27 கிளை மன்றங்கள் நேற்று திடீரென கலைக்கப்பட்டன. விஜய்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அடையாள அட்டை, பதிவு சான்றிதழ் ஆகியவை எரிக்கப்பட்டன.
0 comments :
Post a Comment