வாக்குப் பதிவு நடக்கும் நாளில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள, தேர்தல் ஆணையம் வழங்கிய புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் ஆணையத்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும். இந்த இரண்டு ஆவணங்களில் ஏதாவது ஒன்றுகூட இல்லை என்றால் வாக்களிக்க முடியாது.
வாக்காளர் பட்டியல் அல்லது தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் சிலிப்பில் புகைப்படம் இல்லாதவர்கள் மட்டும் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள மாற்று ஆவணங்கள் 13ல் ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி வாக்களிக்கலாம்.
* பாஸ்போர்ட்,
* ஓட்டுநர் உரிமம்,
* வருமான வரி அடையாள அட்டை (பான்கார்டு).
* மாநில மற்றும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம் ஆகியவற்றால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை.
* 28.2.2011 வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விவசாய அடையாள அட்டை.
* 28.2.2011 வரை வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய முன் னாள் படைவீரர்கள் ஓய்வு ஊதிய குறிப்பேடு, ஓய்வு ஊதிய ஆணை போன்ற ஓய்வு ஊதிய ஆவணங்கள் மற்றும் முன்னாள் படை வீரரின் மனைவி மற்றும் சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வு ஊதிய ஆணை, விதவை ஓய்வு ஊதிய ஆணை.
* புகைப்படத்துடன் கூடிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை.
* புகைப்படத்துடன் கூடிய பட்டா மற்றும் பதிவு செய்யப்பட்ட சொத்து சம்மந்தப்பட்ட ஆவணங்கள் முதலி யவை.
* 28.2.2011 அன்று அல்லாத அதற்கு முன்பு உரிய அதிகாரிகளால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றுகள்.
* புகைப்படத்துடன் கூடிய ஆயுத உரிமம்
* புகைப்படத்துடன் கூடிய மாற்று திறனாளிகளுக்கான சான்றுகள்
* புகைப்படத்துடன் கூடிய தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட அடையாள அட்டை
* மத்திய தொழிலாளர் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு இந்த 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
0 comments :
Post a Comment