மெல்போர்ன் : தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டுமே தற்போதைய அளவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கிரிக்கெட் மோகம் ஒட்டுமொத்த உலகத்தையே ஈர்த்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.
இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, மும்பை வாங்கடே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. உலகெங்கும் உள்ள இந்தியர்கள், இந்தியாவின் வெற்றியை காண ஆவலுடன் உள்ளனர். இந்திய பிரதமரும், இந்தியாவி்ன வெற்றிக்கு அனைவரும் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், நாளை நடைபெற உள்ள போட்டியைக் காணும் பொருட்டு, போட்டி நடைபெறும் நேரத்தில் பணியில் ஈடுபடப் போவதில்லை என்று ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய டாக்சி டிரைவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக, ஆஸ்திரேலியர்கள் மிகுந்த கலக்கமடைந்துள்ளனர். மேல்படி்பபிற்காக ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய மாணவர்கள் பெரும்பாலானோர் பகுதிநேர வேலையில் ஈடுபட்டு வருகி்ன்றனர். அந்த பகுதிநேர வேலைகளில், டாக்சி ஓட்டுவது முதன்மை இடத்தைப் பிடிக்கிறது.
இதுகுறித்து, அந்த டாக்சி டிரைவர்கள் கூறியதாவது, போட்டி துவங்கியதிலிருந்து முடியும்வரை நாங்கள் டாக்சி ஒட்டுவதில்லை என்றும், இந்தியாவின் வெற்றியை கண்குளிர கண்டு ரசிக்க ஆர்வமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்னர். சாட்டர்டே நைட் பார்ட்டி நேரத்தில் போட்டி நடப்பதால், தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போதும் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியர்கள் தெரிவித்தனர். இவர்கள் உள்ளிட்ட உலகில் வாழும் அனைத்து இந்தியர்களின் கனவை நனவாக்கும் வண்ணம், இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும்
0 comments :
Post a Comment