Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, April 14, 2011

பொரிக்கியான போலீஸ்!! பொறுமை இழந்த பொதுமக்கள்?

காஞ்சிபுரத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் ஒருவர், மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சியையடுத்த விஷ்ணு காஞ்சியில், தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ராஜஸ்தானில் இருந்து வந்திருந்த மத்திய ரிசர்வ் போலீசார், விஷ்ணு காஞ்சியிலுள்ள ஒரு மகாலில் தங்கியிருந்தனர். ஊர் திரும்ப தயாராகியிருந்த நிலையில், இன்றிரவு அவ்வழியே நடந்து சென்ற பிளஸ் 2 மாணவி ஒருவரை, அங்கிருந்த சி.ஆர்.பி.எப்., போலீஸ்காரர் ஒருவர் கையை பிடித்து இழுத்து வம்பு செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் போலீஸ் காரரை கைது செய்ய கோரி, விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Reactions:

1 comments :

அத்து மீறிய போலிஸ் நண்பரை கைது செய்ய சொன்னது ஏற்றுக் கொள்ளகூடாத ஒன்று.

அவர் அப்ப்படி என்னத்தை செய்து விட்டார்?

ஒரு பெண்ணின் கைய்யை பிடித்துதானே இழுத்தார் அதர்க்கு போயி காவல் துறையிடம் அந்த வட நாட்டு போலிஸை கைது பன்னுங்கள் என்றால் கைது என்ற பெயரில் கைது செய்து பாதுகாப்பாக அவர் மாநிலத்திர்க்கலாவா அனுப்பி வைப்பார்கள்.

எப்பொழுது இந்த செய்தி பொது மக்கள்களின் கவனத்திர்க்கு வந்ததோ அப்பவே அந்த அயோக்கியனின் கைய்யை வெட்டி விட்டல்லவா போலிஸிடம் புகார் கொடுத்திருக்கனும்.

அந்த பொண்ணே அவனை தர்க்காப்பிர்க்காக கொன்றேன் என்றாலும் இந்திய தர்க்காப்பு சட்டம்.

இந்திய தண்டனை சட்டத்தின்
(Indian Penal Code) பிரிவுகள் 96 முதல் 106 வரை இந்த தற்காப்புரிமை குறித்த வரையறைகளை நிர்ணயம் செய்கின்றன.

பிரிவு 96: தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படும எச்செயலும் குற்றச்செயல் ஆகாது.

பிரிவு 97: முதலாவதாக, தனது உடலையும், மற்ற உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ள
உரிமை.

இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிப்பு, அல்லது அத்துமீறல் போன்ற குற்றச்செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.

இந்த பிரிவின்படி நமக்கோ, நமது சுற்றத்தினருக்கோ, நாம் முன்பின் அறியாதவருக்கோ – உடலுக்கோ, உடைமைக்கோ, பெண்களின் மானத்திற்கோ ஆபத்து ஏற்படும் காலத்தில் நாம் தாராளமாக எதிர்வினை ஆற்றலாம். அந்த எதிர்வினைகள் நமது எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் அது குற்றமாகாது.

இனி எவனாவது எந்தப் பெண்ணின் கைய்யைப் பிடித்து இழுக்கிறான் என்று பார்ப்போம்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!