ஜோகன்னஸ்பெர்க் : இந்திய பயற்சியாளர் பதவியிலிருந்து விலகிய கேரி கிறிஸ்டன் தென் ஆப்ரிக்கா பயிற்சியாளராக விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கேரி கிறிஸ்டன் இந்திய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலத்தில் டெஸ்ட் அரங்கில் இந்திய அணி முதலிடத்தை பெற்றது. ஒரு நாள் தொடரில் உலக கோப்பையை கைப்பற்றியது. தென் ஆப்ரிக்க அணி உலக கோப்பை தொடரில் தோல்வியடைந்ததால் அந்த அணி பயிற்சியாளர் பதவியிலிருந்துவிலகியுள்ளார். இதனால் புதிய பயற்சியாளரை தேர்ந்தெடுக்க அந்நாட்டு கிரிக்கெட் போர்டு தீவிரமாக உள்ளது.
பயற்சியாளராக விண்ணப்பிக்கும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்டன் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் வேறு சில திட்டங்களுக்காகவும் அவர் காத்து கொண்டிருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளன. கிறிஸ்டன் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதை தென் ஆப்ரிக்க தேர்வு குழுவை சேர்ந்த ஆண்ட்ரு ஹூட்சனும் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக கிறிஸ்டன் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு சி.இ.ஓவுடன்ஆலோசனை நடத்தி வருவதாகவும் ஆண்ட்ரு கூறியுள்ளார்.
1 comments :
Let see, If kirsten changes the Chokers way.....
Post a Comment