Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, April 23, 2011

என்று நிறுத்தப்படும் மூட பழக்கவழக்கம்??

முன்னணி நடிகர் என்ற பட்டியலில் இடம்பெறாவிட்டாலும், பிரபல நடிகர் என்ற பட்டியலி்ல் இருக்கும் நடிகர் ஜீவா நடித்திருக்கும் புதிய படமான கோ, நேற்று ரீலிஸ் ஆனது. இப்படம் வெற்றியடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பால்குடம் தூக்கி, அபிஷேகம் செய்தனர்.

சென்னை வடபழனி ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டரில் கோ படத்தை பார்க்க வந்த ரசிகர்கள், முன்னதாக மேளதாளம் முழங்க, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தியேட்டர் வாசலில் கட்டப்பட்டிருந்த ஜீவா கட்-அவுட் மீது தாங்கள் குடங்களில் கொண்டு வந்த பாலை ஊற்றி, வழக்கம்போலவே தலைவர் வாழ்க... என்ற ‌கோஷத்துடன் தியேட்டருக்குள் சென்று படம் பார்த்தனர்.

தங்கள் தலைவர் நீண்ட நாள் வாழ வேண்டும்; அவர் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுவது ரசிகர்களின் இயல்புதான். அதில் தவறேதும் இல்லை. ஆனால் புனிதமான பொருளாக கருதப்படும் பாலை கட்-அவுட் (சாமியையும் சேர்த்து)மீது ஏன் ஊற்ற வேண்டும்? தலைவர் தெய்வத்துக்கு நிகரானவர் என்று ரசிகர்கள் சொன்னாலும், அந்த பாலை ஒருவேளை பால்கூட கிடைக்காமல் கஷ்டப்படும் ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் எவ்வளவு உதவிகரமாக இருக்கும் என்பதை உணர மறுப்பது ஏன்? ஏழையின் சிரிப்பினில் இறைவனை காணலாம்.. என்பது ரசிகர்கள் புரிந்து கொள்வது எப்போது?

தங்கள் கட்-அவுட்டின் மீது பால் அபி‌ஷேகம் செய்வதை ஊக்குவிக்கும் தலைவர்கள், நடிகர்கள் இருக்கும் வரை ரசிகர்கள் திருந்துவார்களா என்ன? இதுபோன்ற கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க யாராவது முன்வருவார்களா? கட்-அவுட்டுக்கு ஊற்ற பயன்படுத்தப்படும் பாலை கஷ்டப்படும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் முன்வருவார்களா?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!