Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, April 30, 2011

மக்களை அச்சுறுத்தும் பூச்சிகொல்லி!! தடை வருமா?

இன்று மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பூச்சிக் கொல்லிகளில் "என்டோ சல்பான்' முக்கிய இடத்தை வகிக்கிறது. இதை தடை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது. விவசாய நிலத்தில் சாறு உறிஞ்சும் புழுக்கள் மற்றும் தண்டு துளைப்பான்களை கட்டுப்படுத்த பயிர்களின் ஆரம்ப நிலையில் என்டோ சல்பான் தெளிக்கப்படுகிறது. இது குளோரின் கலந்த ஹைட்ரோ கார்பன் மற்றும் கரிம சல்பைட். பல்வேறு வணிகப்பெயர்களில் விற்கப்படுகிறது.

கேரளா மாநிலம் காசர்கோடு முழியார், பெல்லூர் பகுதியில் 4700 ஏக்கரில் பயிரிடப்பட்ட முந்திரி தாவரங்களின் மீது என்டோ சல்பான், ஹெலிகாப்டர் மூலம்தெளிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு சுற்றுப்புற கிராமங்களில் பலர் பலியானார்கள். அங்கிருந்த பலர் சுவாச பாதிப்பு, அலர்ஜி, வாந்தி, தலைவலி, கை, கால் வலிப்பு, திருகிய கால்கள், தசை வளர்ச்சி குன்றுதல், புற்று நோய், பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். கிராம மக்களின் ரத்தத்தை பரிசோதித்த போது, நீரில் கரைந்துள்ள என்டோ சல்பான் அளவைக் காட்டிலும் பல நூறு மடங்கு என்டோ சல்பானின் பங்கு ரத்தத்தில் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் குடல் புற்று நோய்கள், பெண்களை பாதிக்கும் நோய்கள், இனப்பெருக்க வளம் குன்றல், கருச்சிதைவுகள், ஹார்மோன் பிரச்னைகள் ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த பூச்சிக் கொல்லியை நாடு முழுவதும் தடை செய்யக்கோரி கேரளாவில் தினந்தோறும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு பந்த் நடந்தது. முதல்வர் அச்சுதானந்தன் உண்ணாவிரதம் நடத்தினார். பல்வேறு நாடுகள் இதற்கு தடை விதித்துள்ளது. 1999 ல் இருந்து ஹாலந்து, ஜெர்மனி, டென்மார்க், ஸ்வீடன், வங்கதேசம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் நாடுகள் முற்றிலுமாக தடை செய்துள்ளது. இந்தியாவில் பருவ காலங்களில் ஒரு கோடி லிட்டர் என்டோ சல்பான் பயன்படுத்தப்படுகிறது. இதை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!