Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, April 5, 2011

மீடியாக்களின் அற்பமான செயல்? அஃப்ரிதி!

கராச்சி : இந்தியர்களுக்கு பரந்த மனப்பான்மை இல்லை என பாகிஸ்தானின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டன் ஷாகித் அஃப்ரிதி கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தான் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிறிய விவகாரங்களை மீடியாக்கள் பெரிதாக்குகின்றன. இது அவமானம். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை முன்னேற்ற என்னாலான சிறு முயற்சியை எப்போதும் செய்துவருகிறேன். ஆனால் சில சம்யம் நாம் ஒன்றுசொல்லும்போது அது வேறு ஒன்றாக மாற்றப்படுகிறது. நான் சொல்லாததை சொன்னதாகக் கூறியுள்ளனர் என அஃப்ரிடி தெரிவித்தார்.

இந்தியாவில் கிரிக்கெட்டை மிகவும் ரசித்தேன். இந்திய மக்களை நேசிக்கிறேன். என்னுடைய கருத்துக்களை எதிர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்திய ரசிகர்கள் என் மீது எப்போதும் ஏராளமான அன்பும், பாசமும் வைத்துள்ளனர். மீடியாக்கள் இதுபோன்று அற்பமான விவகாரங்களில் காலத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று அஃப்ரிடி கூறினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!