Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, April 8, 2011

ஆளும் கட்சியின் அடாவடி! அடங்காத தேர்தல் ஆணையம்!!

தேர்தல் நேரத்தில் அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் தடுக்கிறோம். அதனால், தேர்தல் ஆணையம் மீது ஆளுங்கட்சி அதிருப்தியில் இருப்பது வழக்கமான ஒன்றுதான். தேர்தல் களத்தை சமநிலையாக்க விரும்பும் எதிர்க்கட்சிகள் எங்களை நடுநிலையானவர்கள் என்று கூறுவதும் வழக்கமானதுதான்.

தேர்தலில் அளவுக்கு மீறி செலவு செய்யப்படுவதைத் தடுப்பது மட்டும் தேர்தல் ஆணைய நடவடிக்கைகளின் நோக்கமல்ல. வாக்காளர்களுக்கு தரப்படுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் கணக்கில் வராத பணம், பரிசுப் பொருள்கள், மதுபானங்களைக் கைப்பற்றுவதும் எங்களுடைய பணியாக இருக்கிறது. எந்தக் கட்சியையும் எந்த தனிநபரையும் புண்படுத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும்போது சில அத்தியாவசியமான சோதனைகள் அவசியமாகின்றன. அதனால் சில அசெüகரியங்கள் தவிர்க்க முடியாதவையாகின்றன. தேர்தலில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், எந்த மாதிரியான நடவடிக்கைகள் இருக்கும் என்பது கட்சிகளுக்கு முன்பே தெரிந்ததுதான். கட்சிகள் கேட்டுக்கொண்டபடிதான் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இப்போது குற்றம்சாட்டுவது நியாயமற்றது.

அரசியல் சட்டப்படியான கடமைகளில் இருந்து நாங்கள் தவற முடியுமா? முறைகேடுகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்க முடியுமா?

தேர்தலில் பணபலம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. கட்சிகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழகம் மட்டுமல்லாமல், தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் செலவுகளைக் கட்டுப்படுத்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மட்டும் தீவிரமாக நடந்து வருகின்றன.

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சவாலாக இருந்தது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை அடுத்து இப்போது நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது. மாநில அரசு தேர்தல் ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. குறை சொல்லும் அளவுக்கு மாநில அரசு எந்த நேரத்திலும் நடந்து கொள்ளவில்லை என்றார் குரேஷி.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!