Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, April 9, 2011

தேர்தலில் வெற்றி பெற்றாலும் பதவி பறிபோகும்? ஆணையம்!!

தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்த நேரத்திற்குள், விதிமுறைப்படி தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாவிட்டால், அடுத்த சில தினங்களிலேயே பதவியை பறிக்கும், "ஷோ காஸ்' நோட்டீஸ் வழங்கி, அதிரடி நடவடிக்கை எடுக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அதிகபட்சமாக 16 லட்சம் ரூபாய் செலவிடலாம் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகும் நாளில் இருந்து, பிரசார இறுதி நாள் வரை செய்யப்படும் செலவு, இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வேட்பாளர்கள், "கோல்மால்' கணக்குகளை தாக்கல் செய்வதை தடுக்கும் வகையில், முன் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை, தேர்தல் கமிஷன் நிழல் வங்கி கணக்கு துவங்கி, வேட்பாளர்களின் செலவு கணக்கை பராமரித்து வருகிறது.

மேலும், இட்லி முதல் பிரியாணி வரையிலும், கட்சி கொடிகள், தோரணங்கள் என ஒவ்வொன்றுக்கும் ஒரு தொகையை தேர்தல் கமிஷன் நிர்ணயம் செய்து, வேட்பாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதன்படி, வங்கி கணக்கு மூலம் தங்களது செலவு கணக்கை பராமரித்து வரும் வேட்பாளர்களிடம், ஓட்டுப்பதிவிற்கு முன்பாகவே தேர்தல் கமிஷன் மூன்று முறை கணக்குகளை பெற்று, சரிபார்க்கிறது. இதில், நிழல் கணக்கிற்கும், வேட்பாளர்கள் கணக்கிற்கும் வித்தியாசம் இருந்தால், அவற்றை சரிசெய்து தரும்படி, வேட்பாளர்களுக்கு கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.

2 comments :

நண்பர்களே.

தயவுசெய்து இந்த காவல்துறை அதிகாரி துவங்கி இருக்கும் இந்த தளத்தில் இணைந்து உங்கள் ஆதரவை தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

http://cpolicing.blogspot.com/2011/02/blog-post_10.html

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!