கடந்த ஏப்.,13ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. தமிழகத்தில், 77.8 சதவீதம் ஓட்டு பதிவானது. 1967ம் ஆண்டு 76.57 சதவீதம் ஓட்டு பதிவானது தான் சாதனையாக இருந்தது. தற்போது, அது முறியடிக்கப்பட்டுள்ளது.
மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. வெற்றி, தோல்வி குறித்து அறிந்து கொள்வதில் அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலானோர், பூத் ஏஜன்டுகள் மூலம், ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் உள்ள அனைத்து பூத்களிலும், ஏஜன்டுகளிடம் ஒரு பட்டியலை வழங்கியுள்ளனர்.
அதில், ஓட்டளிக்க தகுதியுடைய ஆண், பெண் வாக்காளர்கள், பதிவான ஓட்டு விவரம் ஆகிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், தி.மு.க.,வுக்கு சாதகமாக விழுந்த ஓட்டுகளை தனியாக பட்டியலிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின் இறுதியில், கருத்து என்று எழுதப்பட்டு, மூன்று கேள்விகளின் அடிப்படையில் புள்ளி விவரங்களை தொகுத்து வழங்குமாறு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment