Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, April 25, 2011

கடவுளுக்கு மரணம் உண்டா? சிந்தனைக்கு!!

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது’, ‘சீரான உடல்நிலையில் உள்ளார்’ என்று சில நாட்கள் கூறப்பட்டு வந்த சாய்பாபா ஏப்ரல் 24 அன்று காலையில் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுதினமே, அதாவது மார்ச் 28 அன்றே அவர் மரணமடைந்ததாகவும் ஆனால் நல்ல நாளில் அவரின் மரணத்தை அறிவிக்க வேண்டும் என்பதற்காக அவரின் குடும்பத்தினர் இதனை பிற்படுத்தியதாகவும் சிலர் கூறுகின்றனர்.

நாள்தோறும் நடைபெறும் ஆயிரக்கணக்கான மரணங்களில் குறிப்பிட்டு சொல்லவதற்கு இவர் ஒன்றும் அரசியல்வாதியோ நாட்டின் தலைவரோ அல்ல. ஆனால் அவர்களுக்கு ஈடான ஒரு மதிப்பை இவர் பெற்றார், ஆன்மீகத்தின் காரணமாக. கடவுள்களுக்கு குறைவில்லாத இந்த தேசத்தில் கடவுளின் அவதாரங்களுக்கும் குறைவில்லை. மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களின் பணம், மானம், உயிர் என எதையும் சூறையாடுவதற்கு இந்த அவதாரங்களும் சாமியார்களும் தவறவில்லை. பிரேமானந்தா முதல் நித்தியானந்தா வரை பல ஆனந்தாக்கள் வந்தாலும் மக்கள் திருந்தியபாடில்லை.

சாய்பாபாவிடமும் சர்ச்சைகளுக்கு குறைவில்லை. பதினான்காவது வயதில் ஷீரடி சாய்பாபாவின் அவதாரமாக தன்னை தானே முடிசூட்டிக்கொண்டார். விபூதி முதற்கொண்டு கைக்கடிகாரம் வரை மந்திர சக்தி மூலமாக வரவழைத்த இவரின் தந்திரத்தை பலரும் போட்டுடைத்தனர்.

1993ஆம் ஆண்டு இவரது ஆசிரமத்தில் காவல்துறையினரால் இவரின் நெருங்கிய வட்டத்தை சார்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். எதற்காக கொல்லப்பட்டனர்? மர்மம் இன்னும் நீடிக்கிறது. பாலியல் குற்றச்சாட்டுகளும் இவர் மீதுண்டு. இருந்தபோதும் இவரின் புகழுக்கும் பக்தர்களுக்கும் எவ்வித குறையுமில்லை. சாமான்ய மக்கள் முதற்கொண்டு நாட்டின் பிரதமர்கள், ஜனாதிபதிகள் என அனைவரும் இவரின் பக்தர்கள். பெரியாரின் பகுத்தறிவு பாசறையிலும் அண்ணாவின் வழிகாட்டுதலிலும் வந்ததாக கூறிக்கொள்ளும் கலைஞர் இவருக்கு ஒரு பாராட்டு விழாவையும் எடுத்தார். இவரின் குடும்பத்தினர் பாபாவின் பக்தர்கள்.

இவை ஒரு புறம் என்றால்,போலி ஆன்மீகத்தை மக்கள் இனியாவது உணர்வார்களா என்ற கேள்வி மீண்டும் ஒருமுறை எழுந்துள்ளது. தான் 94 வயது வரை உயிர் வாழ்வேன் என்றும் அதற்கு முன் அடுத்த சாய்பாபாவை அறிவிப்பதாகவும் சாய்பாபா தெரிவித்திருந்தார். கடவுளின் அவதாரம் என்று கூறியவருக்கு தான் இந்த உலகை விட்டு பிரியப்பபோகும் நாளை.. இல்லை.. வருடத்தை கூட அறியும் சக்தி இல்லை என்பதை தற்போது அனைவரும் அறிந்துள்ளனர்.

மரணத்தை வென்றவர் எவரும் இல்லை. மரணம் தங்களை அழைத்து செல்லும் நேரத்தையும் எவரும் அறிவதில்லை. 125 ஆண்டுகள் வரை வாழ்வேன் என்று உறுதியுடன் கூறிய காந்தியடிகளையும் ‘எனக்கு மரணமே கிடையாது’ என்று கூறிய யாகவா முனிவரையும் இதே பூமியில் தான் நாம் கண்டோம். இறுதியில் வென்றவர் யார் என்பதையும் நாமறிவோம். நிச்சயம் சம்பவிக்க கூடிய மரணத்தை மனித மனம் ஏனோ ஏற்க தயங்குகின்றது.

நித்திய வாழ்வும் நீடித்த ஆயுளும் வேண்டும் என்பது அனைவரும் விரும்பும் ஒன்று. இது மனித இயல்பு. மனிதனை படைத்த இறைவனை இந்த நித்திய வாழ்வை வைத்தே உள்ளான். மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை பெரும்பான்மையான மதங்கள் கூறுகின்றன.

இஸ்லாம் இதனை தெளிவாக கூறுகின்றது. இந்த உலக வாழ்க்கை பயிர் செய்யும் ஒரு பூமியே. இதற்கான அறுவடையை மனிதன் மரணத்திற்கு பின் வரும் மறுமை என்ற வாழ்க்கையில்தான் மேற்கொள்ள முடியும். இவ்வுலகில் மனிதன் நல்லறங்களை செய்தால் சுவனத்தை அடைவான், தீயறங்கள் புரிந்தால் நரகத்தில் புகுவான். சுவனமோ, நரகமோ இரண்டுமே நிலையான வாழ்க்கைதான். ஆக தன்னை படைத்த இறைவனை ஏற்றுக்கொண்டு, நல்லறங்கள் புரிந்து வாழ்ந்தால் மனிதன் நிச்சயம் சுவனத்தில், ஒரு நிலையான வாழ்க்கைக்காக பிரவேசிப்பான். இந்த நிலையான வாழ்க்கையை அடைய அவன் நிச்சயம் மரணிக்க வேண்டும். ஆனால், மரணம் முற்றுப்புள்ளி அல்ல… உன்னல், உடுத்தல், மலஜலம் கழித்தல், உறக்கம், மரணம் இதை செய்பவர் எப்படி கடவுளாக முடியும்?

-ஏர்வை ரியாஸ்

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!