Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, April 9, 2011

மூன்று அரபு நாடுகளில் பிரமாண்ட பேரணி?

டமாஸ்கஸ், மனாமா, கெய்ரோ : அரசுக்கு எதிரான போராட்டங்கள் வழக்கமாக மாறியுள்ள சிரியாவிலும், எகிப்திலும், பஹ்ரைனிலும், எமனிலும் நேற்று பிரம்மாண்டமான கண்டன பேரணிகள் நடந்தன. ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு இந்நிகழ்ச்சிகள் நடந்தேறின.

சிரியாவில் பஸ்ஸார் அல் ஆஸாதின் ராஜினாமாவைக்கோரி நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம் பவத்தில் ஏழுபேர் கொல்லப்பட்டதாக அல்ஜஸீரா கூறுகிறது. காமிஸிலி, தெய்ரா ஸூர், டமாஸ்கஸ் ஆகிய இடங்களிலும் பிரம்மாண்டமான போராட்டங்கள் நிகழ்ந்தன. சாதாரண மக்கள், ப்ரொஃபசனல்கள், இஸ்லாமியவாதிகள், தேசீயவாதிகள், வயோதிகர், மாணவர்கள் உள்பட சமூகத்தின் அனைத்து பிரிவினரும் போராட்டங்களில் பங்கேற்றதாக பத்திரிகைகள் கூறுகின்றன.

யெமன் சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் ராஜினாமாவைக்கோரி மக்கள் வீதிகளில் இறங்கி ஸ்தம்பிக்க வைத்தனர்.பெப்ருவரி 14-ஆம் தேதி முதல் போராட்டம் நடந்துவரும் பஹ்ரைனில் இரண்டு நூற்றாண்டு காலமாக நடந்துவரும் மன்னர் ஆட்சியை முடிவுக்கொண்டுவர எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தினர்.

யெமன் தலைநகர் ஸன்ஆவில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடிப்பதற்காக போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்பேர் கொல்லப்பட்டனர்.பலர் காயமடைந்துள்ளனர்.இதனை பி.பி.சி தெரிவித்துள்ளது.

ராஜினாமாச்செய்த ஹுஸ்னி முபாரக்கை குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனக்கோரி எகிப்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.முன்னர் முபாரக்கின் ராஜினாமாக்கோரி நடந்த எழுச்சியின் மையமாக விளங்கிய தஹ்ரீர் சதுக்கத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர்.ஹுஸ்னி முபாரக்கின் ராணுவத்தைச்சார்ந்த ஐந்து உயர் அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!