லண்டன் : பாராளுமன்ற நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக இங்கிலாந்தின் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1987முதல் 2010 வரையிலான கால கட்டங்களில்இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவிவகித்தவர். எலியாட் மோர்லே. இவர்தன்னுடைய பதவி காலத்தில் சுமார் 49 ஆயிரத்து 650 அமெரிக்க டாலர் அளவிற்கு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது கண்டறியப்பட் டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஒருவர் இத்தகைய மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.மேலு<ம் பார்லிமென்ட்டின் கீழ்சபையில் தொழிலாளர்கட்சியை சேர்ந்த எரிக்இல்ஸ்லே மற்றும் டேவிட்செய்டார் ஆகியோர் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த2009ம் ஆண்டில் 12-க்கும் மேற்பட்டோர் இத்தகைய மோசடியில் தொடர்பிருப்பதாக டெய்லி டெலிகிராப் பத்திரிகை சுட்டிகாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment