பைக்கானூர் : மூன்று விண்வெளி வீரர்களுடன் ரஷியாவின் சோயூஸ் எப்.ஜி. விண்வெளி ஒடம் செவ்வாய்க்கிழமை விண்ணில் பாய்ந்தது.
கடந்த 1961-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி ரஷியாவின் யூரி ககாரின் விண் கலத்தில் கஸகஸ்தானின் பைக்கானூர் விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். இதுவே உலகின் முதல் விண்வெளிப் பயணமாக அமைந்தது. இந்த நிகழ்வின் 50 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பைக்கானூர் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சோயூஸ் எப்.ஜி. விண்வெளி ஒடம் செவ்வாய்க்கிழமை காலை விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்வெளி ஓடத்தில் ரஷிய விண்வெளி வீரர்கள் அலெக்ஸôண்டர் சமோக்யதியாவ், ஆண்ட்ரே போரிùஸன்கோ ஆகியோரும் அமெரிக்க விண்வெளி வீரர் ரெனால்டு கரன் ஆகியோர் சென்றுள்ளனர். இதில் அமெரிக்க விண்வெளி வீரர் ரொனால்டு கரன் ஏற்கெனவே அமெரிக்காவின் டிஸ்கவரி ஒடத்தில் பயணம் மேற்கொண்டவர். மற்ற இரு வீரர்களுக்கும் இதுவே முதல் விண்வெளிப் பயணம்.
0 comments :
Post a Comment