Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, April 10, 2011

பாஸ்போர்ட் பெற கட்டுப்பாடு? ஈழத் தமிழர்களுக்கு!!

கொழும்பு, ஏப்.10:வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரியுள்ள இலங்கைப் பிரஜை ஒருவர், அதே நாட்டில் வசிக்கும் காலத்தில் அவருக்கு இலங்கை பாஸ்போர்ட் வழங்கப்பட மாட்டாது என்ற நடைமுறை 4-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று அகதி அந்தஸ்து கோரும் நபர்கள் முதலில் தமது இலங்கை பாஸ்போர்ட்டை கிழித்துவிட்டே தமக்கு இலங்கையில் வாழ முடியாத நிலை உள்ளதாக அந்த நாடுகளில் தஞ்சம் புகுகின்றனர். அதன் பின் அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் சரியான முறையில் இருந்தால் அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படுகின்றது. பின்னர் அவர்கள் புதிய இலங்கை பாஸ்போர்ட்டை பெற்று அதில் தமது விசாவை பதிக்க வேண்டியிருக்கும்.

அவ்வாறு விசாவை பதித்துக் கொள்வதற்காக புதிய பாஸ்போர்ட் பெற முயற்சிப்பவர்களுக்கு இனி வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலமாக பாஸ்போர்ட்டுகள் வழங்குவதில்லை என்ற முடிவை அரசு எடுத்துள்ளது. அதற்கு பதிலாக இலங்கை செல்வதற்கான தற்காலிக அடையாள ஆவணம் வழங்கப்படும். அதை எடுத்துக்கொண்டு இலங்கை சென்று புதிய பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொண்டு தாங்கள் வாழும் நாடுகளின் விசாவை பதிவுசெய்துகொள்ளலாம் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இவ்வாறு அந்த இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!