Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, April 2, 2011

வோட்டுக்கு..., நோட்டு?? பரிசு!!

கடந்த 1991-96ம் ஆண்டு வரை தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி நடந்து வந்தது. அப்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில், "கட்-அவுட்' கலாசாரம், வளர்ப்பு மகன் திருமணம், ஆடம்பரம் போன்றவை தலை தூக்கி இருந்தன. இதனால் பொதுமக்களிடம், அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.க., மீது கடும் அதிருப்தி நிலவியது. இதன் எதிரொலியாக, 1996ம் ஆண்டு தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட நெடுஞ்செழியன் போன்ற மூத்த தலைவர்கள் கூட, தொகுதி மாறி வேறு தொகுதிகளில் போட்டியிட்டனர். பிரசாரத்தின் போது, அ.தி.மு.க., வேட்பாளர்கள் பலர் திருப்பி அனுப்பப்பட்டனர். வேட்பாளர்களை ஊருக்குள்ளேயே நுழையவிடாமல், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது மக்களின் எதிர்ப்பு, தேர்தல் முடிவிலும் எதிரொலித்தது. அ.தி.மு.க., வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

அந்த நிலைமை இப்போது ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில், ஏற்கனவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, ஆளுங்கட்சி எடுத்து வைத்திருந்தது. ஐந்தாண்டுகளும் வழங்கப்பட்ட நலத் திட்டப் பணிகள் அனைத்தும், மக்களைச் சென்றடையும் போது, உள்ளூர் எம்.எல்.ஏ.,க்களின் பங்கேற்பும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப்பட்டது. அதற்கு ஓரளவு பலனும் கிடைத்தது. எம்.எல்.ஏ.,க்கள் அடிக்கடி தென்படுவதால், மக்கள் மத்தியில் பெரியளவில் வெறுப்பும் எழவில்லை. இதெல்லாம், முதல் இரண்டு ஆண்டுகள் மட்டும் தான். அடுத்தடுத்த சம்பவங்கள் அதைத் தக்கவைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சுனாமி போல வந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார், மக்களின் மன நிலையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. "எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் அனைவருமே வலுவாக சம்பாதித்து விட்டனர்' என்ற எண்ணம், எல்லாருக்கும் ஏற்படத் தொடங்கியது. இடைத்தேர்தல்களில் வழங்கப்பட்ட பணம், அவர்களின் ஆசையைத் தூண்டிவிட்டது. "ஓட்டுக்கு நோட்டு வாங்குவது தங்கள் உரிமை' என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவு, தற்போது விபரீதத்தில் முடிந்திருக்கிறது.

இந்தத் தேர்தல் பிரசாரத்தில் நடந்த சில சம்பவங்களும், 1996 நிலைமை திரும்புகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கின்றன. திருவாரூரில், முதல்வர் மகள் செல்வி பிரசாரத்தின் போது, ஒரு முதியவர், "எங்களுக்கு என்ன செய்தீர்கள், உங்களுக்கு ஓட்டு போடுவதற்கு' என நேரடியாகவே கேட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில், அமைச்சர் சுப.தங்கவேலனை பொதுமக்கள் ஊருக்குள் நுழையவிடாமல் தடுப்பதற்காக, தங்கள் சாலையையே வெட்டி திருப்பி அனுப்பியுள்ளனர். விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பிரசாரம் சென்ற போது, ஊருக்குள் நுழைய விடாமல், கிராம எல்லையிலேயே பொதுமக்கள் தடுத்துள்ளனர். சென்னை மயிலாப்பூரில், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பிரசாரம் மேற்கொண்ட போது, ஒரு மூதாட்டி, "ஆமா, தேர்தல் அப்ப வருவீங்க; ஓட்டு வாங்கிட்டு போவீங்க; அதுக்கப்புறம் இந்தப் பக்கமே வரமாட்டீங்க... உங்களுக்கு எதுக்கு ஓட்டு போடணும்' என, திட்டி அனுப்பியுள்ளார்கள்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!