Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, April 7, 2011

ஒரே நாளில் குவிந்த ரசிகர்கள்?

பார்சிலோனா : ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி, சமூக இணைய தளமான ஃபேஸ் புக்கில் இணைந்துள்ளார்.

அவர் இணைந்த ஒரு சில மணி நேரத்திலேயே உலகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கானோர் அவரது ரசிகராக ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளனர். இதுவரை 70 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஃபேஸ் புக் மூலம் லட்சக்கணக்கானோருடன் இணைந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக தனது பதிவில் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார். 23 வயது இளம் வீரரான மெஸ்ஸி, ஆர்ஜென்டீனா தேசிய அணி மற்றும் லா லிகா, பார்சிலோனா அணிகளுக்காகவும் விளையாடி வருகிறார். பிரபல கால்ந்தாட்ட வீரர் மரடோனா இவரை தனது விளையாட்டு வாரிசு என்றே அறிவித்துள்ளார்.

உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதை மெஸ்ஸி இருமுறை வென்றுள்ளார். மற்றொரு பிரபல சமூக இணைய தளமான டுவிட்டரில் அவர் இன்னும் இணையவில்லை.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!