ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. துணை ராணுவம், சிறப்பு போலீஸ் படை, தமிழக அதிரடிப்படை, உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மாவட்ட மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர்கள், கூட்டுறவு இணைப்பதிவாளர், கால்நடை, விவசாயத்துறைகளின் இணை இயக்குனர்கள், ஊராட்சி உதவி இயக்குனர், பல துறைகளில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், ஓட்டு எண்ணிக்கை மையங்களை தினமும் சுற்றி வந்து கண்காணிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு அதிகாரியும் காலை 8 முதல் இரவு 8 மணி வரையும், இரவு 8 முதல் காலை 8 மணி வரையும் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறுகள் நடந்தால் அன்று பணியில் இருக்கும் அதிகாரிகளே பொறுப்பு என்பதால் கண்காணிப்பு அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
0 comments :
Post a Comment