சென்னை : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் பெயரால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உறவை முறித்துக்கொள்ள மாட்டோம் எனவும், வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் எனவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் மு.கருணாநிதி.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனது மகளும், மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழியை குற்றவாளியாக சேர்த்திருப்பது கவலைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இவ்வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் எனவும், மகள் மற்றும் கட்சி நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என கருணாநிதி தெரிவித்தார்.
குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதால் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் பாதிப்பு இல்லை. எங்கள் கட்சியின் நிலை குறித்தும், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இன்று முடிவு செய்வோம் என்றார் கருணாநிதி.
வரும் 6ம் தேதி 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதே, அவர் ஆஜராவாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் ஜெயலலிதா அல்ல என தெரிவித்த கருணாநிதி,சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜரானாரா?. 2ஜி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.
0 comments :
Post a Comment