Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, April 27, 2011

புதிய பயிற்சியாளர் தேர்வு, இந்திய கிரிகெட் அணிக்கு

மும்பை : இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வுபெற்றார். இதையடுத்து டங்கன் பிளெட்சர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சியாளராக தொடர்வதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார்.

மும்பையில் புதன்கிழமை பிசிசிஐ கூட்டத்தின்போது பிளெட்சரை பயிற்சியாளராக நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் டங்கன் பிளெட்சர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்வாரா என்பது தெரியவி ல்லை என்று சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ள எரிக் சிம்மன்ஸ் தொடர் ந்து பணியாற்றுகிறார்.

பிசிசிஐ கூட்டத்தின்போது புதிய பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்று கூறியிருந்த நிலையில் டங்கன் பிளெட்சர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டங்கன் பிளெட்சர் 2008-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு வரை தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். இவரது பயிற்சியின் கீழ் இங்கிலாந்து அணி 2005-ம் ஆண்டு ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியது. 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்ற ஜிம்பாப்வே அணிக்கு கேப்டனாக இருந்தவர் பிளெட்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!