வாக்காளர்களாகிய நீங்கள் நல்ல தீர்ப்பு தரவேண்டும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். கோவையில் நடந்த அ.தி.மு.க., கூட்டணி கட்சி பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தமிழன காவலன் என்று சொல்லிக்கொண்டு தமிழன படுகொலையை வேடிக்கை பார்த்தவர் கருணாநிதி என்று தெரிவித்தார்.
ஆதரவு வாபஸ் என்ற முடிவை தற்போது எடுக்கும் கருணாநிதி, இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, இந்த முடிவை எடுத்திருந்தால், இவ்வளவு தமிழர்கள் இறந்திருக்க மாட்டார்கள் என தெரிவித்தார். அப்போது அ.தி.மு.க., மத்திய அமைச்சரவையில் இருந்திருந்தால் நிச்சயம் ஆதரவை வாபஸ் வாங்கியிருப்போம் என்றும் அவர் பேசினார்.
செம்மொழி மாநாடு என்ற பெயரில் பல கோடிகளை செலவழித்து அங்கு தமிழறிஞர்களை கவுரவப்படுத்துவதற்கு பதிலாக தனது குடும்பத்தினரை முன்னிலைப்படுத்தி, தமிழறிஞர்களை நிற்க வைத்தவர் கருணாநிதி என்று தெரிவித்தார்.
நம் ஈழத்தில் மக்கள் செத்து மடியும்போது வாய்திரக்காத ஜெயா இன்று வாக்குக்காக வாய்திறக்கிறார், எல்லாம் அரசியல் நாடகம். அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் வந்ததும் ஆளைப்பிடி, காலைப்பிடி என்று குதிக்கும், உண்மையான பாசமல்ல.
0 comments :
Post a Comment