புதுடில்லி : தமிழகத்தில், கடந்த சட்டசபை தேர்தலை விட, தற்போது, 11 சதவீத ஓட்டுகள் அதிகமாக பதிவாகியுள்ளன. கேரளாவிலும் அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் கமிஷன் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரம் காரணமாகவே, இது சாத்தியமாகியுள்ளது' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தலைமை தேர்தல் கமிஷன் இயக்குனர் ஜெனரல் அக்ஷய் ரவுத் கூறியதாவது தமிழகத்தில், கடந்த சட்டசபை தேர்தலை விட, இந்த தேர்தலில், 11 சதவீத ஓட்டுகள் அதிகம் பதிவாகியுள்ளன. கேரளாவிலும், கடந்த தேர்தலை விட, தற்போது, 4.21 சதவீதம் அதிக ஓட்டு பதிவாகியுள்ளது.தபால் ஓட்டுகள் இன்னும் கணக்கில் சேர்க்கப்படவில்லை. அவற்றையும் சேர்த்தால், சதவீதம் மேலும் அதிகரிக்கும். அசாம், புதுச்சேரி மாநில தேர்தல்களிலும், இந்த முறை அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
இதற்கு முன், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களிலும், ஓட்டுப் பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்திருந்தது.ஓட்டளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரங்களை, மீடியாக்கள் மூலம், தேர்தல் கமிஷன் மேற்கொண்டது, மக்களின் விழிப்புணர்வு இதற்கு காரணம் இவ்வாறு அக்ஷய் ரவுத் கூறினார்.
0 comments :
Post a Comment