தேர்தல் கமிஷன் சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறது என்றும், சோதனை என்ற பெயரில் மக்களை துன்புறுத்துவதாகவும் எனவே தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். இதன் படி தேர்தலை நியாயமாக நடத்தும் வகைக்கு தேர்தல் கமிஷனுக்கு எல்லா அதிகாரமும் உண்டு என்றும் , கமிஷன் எடுக்கும் நடவடிக்கை அதிகாரத்தில் தலையிட முடியாது என்றும் , அதேநேரத்தில் நடத்தப்படும் சோதனைகள் தொடர்பாக உரிய ஆவணங்கள் பராமரித்து கொள்ளப்பட வேண்டும் என்றும், இத்துடன் பணம் பட்டுவாடா, பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை தடுக்க கமிஷனுக்கு அதிகாரம் உண்டு. இவ்வாறு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் ஓட்டளிப்பு நேரம் மாற்றம், வழக்கமாக ஓட்டுப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த முறை காலை ஒரு மணிநேரம் தாமதமாக துவங்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது, இதன்படி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும்.
0 comments :
Post a Comment