வழக்கமாக, ஒவ்வொரு தேர்தலிலும், 60, 65 சதவீதம் வரை பதிவாகும் ஓட்டுப்பதிவு, இந்த முறை யாருமே எதிர்பார்க்காத வகையில், 77.8 சதவீதமாக உயர்ந்து விட்டது. அனைத்து மாவட்டங்களிலும், சராசரி ஓட்டுப்பதிவு சதவீதம், 70ஐ தாண்டியுள்ளது. இதனால், யாருக்கு வெற்றி என்பதை முடிவு செய்ய முடியாமல் அரசியல் கட்சிகள் திணறி வருகின்றன.
தொகுதி வாரியாக பதிவான ஓட்டுகளை பார்த்தால், மொத்தமுள்ள, 32 மாவட்டங்களில், ஈரோடு, திருப்பூர், கோவை, திருவள்ளூர், தர்மபுரி, நீலகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களை தவிர, மீதியுள்ள 25 மாவட்டங்களில், 101 தொகுதிகளில், ஆண்களை விட, பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர்.சில தொகுதிகளில், 100 ஓட்டுகள் முதல், அதிகபட்சமாக, 12 ஆயிரத்து, 475 ஓட்டுகள் வரை, பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர். பெரும்பாலான தொகுதிகளில், 3,000 ஓட்டுகள் முதல், 4,000 ஓட்டுகள் வரை, ஆண்களை விட பெண்கள் கூடுதலாக ஓட்டு போட்டுள்ளனர்.
குறிப்பாக பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டதற்கும், தி.மு.க., கூட்டணி தரப்பில் சில கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஊரக வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம், பெண் வாக்காளர்களை, "கவனித்தது' ஆகியவை காரணமாக தான், பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டனர் என்பது அவர்களின் வாதம்.அ.தி.மு.க., கூட்டணியோ, "விலைவாசி உயர்வு, மின்வெட்டு காரணமாக இந்த ஆட்சிக்கு எதிர்ப்பு ஓட்டுகள் அதிகமாக விழுந்துள்ளது' என கூறுகிறது. இரு அணியும், இருவேறு கருத்துக்களை கூறினாலும், பெண் வாக்காளர்கள் யார் பக்கம் என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, ஆண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர். ஆண்கள் ஓட்டு, 89 ஆயிரத்து, 916; பெண்கள் ஓட்டு, 88 ஆயிரத்து, 951.திருவாரூர் தொகுதியில் கருணாநிதிக்கு, பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர். ஆண்கள் ஓட்டு, 83 ஆயிரத்து, 292; பெண்கள் ஓட்டு, 88 ஆயிரத்து, 633 ஆக பதிவாகியுள்ளது.
1 comments :

ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே ...முடிவையும் அறிவித்துவிட்டால் என்ன ?
Post a Comment