வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா கடந்த 2008-ம் ஆண்டு துவங்கிய தேர்தலில் வெற்றி பெற்று கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி முதல் ஆப்ரிக்க- அமெரிக்கர் என்ற பெருமையுடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் அடுத்த ஆண்டு (2012-ம் ஆண்டு நவம்பர் மாதம்) துவங்குகிறது.
இது குறித்து ஒபாமா தனது இ.மெயி்ல் வெப் வீடியோ வாயிலாக தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,வரும் 2012-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட விரும்புகிறேன். ஆகவே தேர்தலுக்கான பிரசாரத்தினை விரைவில் துவங்கவுள்ளேன். எனது வெற்றிக்கு நீங்கள் பாடுபட வேண்டும். இதற்காக இலியேனஸ் மாகாணத்தில் அலுவலகம் திறந்துள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதன் மூலம் ஒபாமா இரண்டாவது முறையாக அதிபர் நாற்காலிக்கு தனது பிரசாரத்தினை இணையதள வெப் வீடியோ வாயிலாக துவக்கியுள்ளார். அமெரிக்க சட்டப்படி அதிபர் தேர்தலுக்கான செயல்முறைகள் வரும் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி ஒரு ஆண்டுகள் வரை நடைபெறும். 2013-ம் ஆண்டு தான் புதிய அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.
0 comments :
Post a Comment