Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, April 9, 2011

சாதனைகளும் வேதனைகளும்? ஸ்டாலின்!

திருவண்ணாமலை : தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் எ.வ. வேலு, கு. பிச்சாண்டி, ஆர். சிவானந்தம், ஜெ. கமலக்கண்ணன், பி.எஸ். விஜயகுமார், எம்.கே. விஷ்ணுபிரசாத், கோ. எதிரொலிமணியன் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பேசியது, கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் கருணாநிதி செய்த சாதனைகள், நிறைவேற்றிய வளர்ச்சித் திட்டங்களைக் கூறி மக்களிடம் ஆதரவு திரட்டுகிறோம்.

ஆனால் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த ஜெயலலிதா மக்கள் மனதில் பதியும் வகையில் என்ன திட்டங்களை நிறைவேற்றினார்? தங்களின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்கும் தகுதி அதிமுகவுக்கு உள்ளதா?

திமுக ஆட்சியில் இதுவரை, கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் 2.7 லட்சம் பேரும், 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 8 லட்சம் பேரும் பயன் பெற்றுள்ளனர். விவசாய கடன் தள்ளுபடி மூலம் 22.4 லட்சம் பேர் பயனடைந்தனர். 57,530 ஆசிரியர்கள், 51,823 சத்துணவு ஊழியர்கள் என பல்வேறு துறைகளில் கடந்த 5 ஆண்டுகளில் 5.05 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தொழில்துறை வளர்ச்சிக்காக 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 51 தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ. 62,349 கோடி முதலீடு தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.3 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர் என்றார் ஸ்டாலின்.

1 comments :

எல்லா விவரங்களையும் சொல்லறீங்க ஆனா ராஜா .............மேட்டர் மட்டும் பேசாம இருக்கீங்க ????

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!