Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, April 8, 2011

ரஜினிக்கு பிராக்கட் போடும்!! ப.ஜ க?

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவை பெற அரசியல் கட்சிகள் முயன்றன. ஆனால் அவர் யாருக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. தி.மு.க. அ.தி.மு.க. என இரு கட்சி வேட்பாளர்களும் ரஜினியை சந்தித்தார்கள்.எல்லோருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

தேர்தலில் நடுநிலை வகிக்க அவர் முடிவு செய்துள்ளார் என தெரிகிறது. ரசிகர்மன்ற நிர்வாகிகளுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம். இதற்கிடையில் தமிழகத்தில் தனித்து போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி ரஜினியின் ஆதரவை பெற தீவிர முயற்சியில் இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி இரு தினங்களுக்கு முன் சென்னை வந்தார். ரஜினியுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார் என்ற தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ரஜினி பிடி கொடுக்காமல் நழுவி விட்டதாக தெரிகிறது. ரஜினியுடன் பேசியது பற்றி நிதின் கட்காரி கூறும்போது, உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை காண ரஜினி குடும்பத்தினருடன் மும்பை வந்து இருந்தார். அப்போது நானும் ஸ்டேடியத்தில் இருந்தேன்.

போட்டி முடிந்து ரஜினி புறப்பட்ட போது கூட்டத்தில் சிக்கினார். நான் அவரை மீட்டு என் வீட்டுக்கு அழைத்து போனேன். தேநீர் அருந்தினார். சென்னை வரும்போது வீட்டுக்கு வாருங்கள் என்று கூறி விட்டு சென்றார். சென்னையில் ரஜினியுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினேன். மதுரைக்கு சென்று கொண்டு இருப்பதாக அவரிடம் தெரிவித்தேன் என்றார்.

இந்த சமயத்தில் ரஜினி “ராணா” படப்பிடிப்பு அரங்கில் இருந்ததாக கூறப்படுகிறது. ரஜினி இந்த தேர்தலில் நடுநிலையாக இருப்பது தான் நல்லது என்பதையே அவர் ரசிகர்களும் விரும்புகிறார்கள் என தெரிகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!