Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, April 9, 2011

கின்னஸ் சாதனையான இந்திய தோசை!!

விஜயவாடா : விஜயவாடா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, ஏராளமான சமையல் கலைஞர்கள் சேர்ந்து தயாரித்த 38.2 அடி நீள தோசை, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள சித்தார்த் கல்லூரியில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இதற்கான விழாவில், மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் சுபோத்காந்த் சகாய், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கின்னஸ் அமைப்பின் பிரதிநிதி எலிசபெத் ஸ்மித் நிகழ்ச்சியில் பார்வையாளராகப் பங்கேற்றார். இதற்கு முன் 32.5 அடி நீளத்தில் தோசை தயாரிக்கப்பட்டதே கின்னஸ் சாதனையாக இருந்ததாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பட்டாபி தெரிவித்தார்.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!