Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, April 20, 2011

அச்சத்தில் அஞ்சல் ஒட்டு!!!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் 2 லட்சத்து 88 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியாற்றினர். அதாவது சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சமாக 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் ஒவ்வொருவரையும் நேரில் அணுகக்கூடிய ஒரு வேட்பாளர், இந்த அரசு ஊழியர்களை மிரட்டி அல்லது தான் செய்த நன்மைகளைக் கூறி, அல்லது ஆட்சிக்கு வந்தால் கவனிப்போம் என்று எச்சரித்து, அல்லது பணம் பட்டுவாடா செய்து இந்த வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சி செய்ய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

பல தொகுதிகளில் சுமார் 1,000 வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக்கூடியவை என்பதில் சந்தேகமே இல்லை. பல தொகுதிகளில் போட்டி கடுமையாக இருந்துள்ளது. இந்தத் தொகுதிகளில் வெற்றி பெறுபவருக்கும் இரண்டாம் இடத்தில் இருப்பவருக்கும் வாக்கு வித்தியாசம் சுமார் 1,000 வாக்குகள் அளவில்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு தபால் வோட்டுகளை மே 13-ம் தேதி வரை அனுமதிப்பதன் மூலம், ஆள்பலம், பணபலம் உள்ள வேட்பாளர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் அன்றைய தினமே இதற்கான படிவங்களைக் கொடுத்து, பூர்த்தி செய்யும்படி சொல்லியிருக்கலாம். அல்லது அதற்கு அடுத்த நாளே இவர்கள் அந்தந்த மையங்களில் இந்தத் தபால் வாக்குகளை அதிகாரிகள் முன்னிலையில் பெற்று, அங்கேயே வாக்குப் பதிவு செய்து, தபால் பெட்டியில் போடும்படி செய்திருந்தாலும் இத்தகைய மிரட்டல் புகார்களுக்கு இடம் ஏற்பட்டிருக்காதே!

கடந்த தேர்தல்களைப் போல் இல்லாமல், இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவுக்கும் வாக்குகள் எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி இருக்கும் நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையம் சிந்தித்து, தபால் வாக்குகள் விஷயத்தில் நல்ல முடிவை எடுத்திருக்க வேண்டும். தற்போது தபால் வாக்குப் பதிவுக்கான படிவங்களை அந்தந்த மாவட்டங்களில் விநியோகிப்பதன் மூலம், இவர்கள் அதனை வீட்டுக்குக் கொண்டு சென்று, பிறகு நிதானமாக பிறிதொரு நாளில் (மே 13 க்குள்) தேர்தல் அலுவலர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் உள்ள பெட்டியில் போட்டால் போதும் என்கிற பழைய வழக்கம் முறையானதாக இருக்குமா?

பணபலமும், ஆள்பலமும் உள்ள வேட்பாளர் ஒவ்வொரு அரசு ஊழியர்களின் படிவத்திலும் தனக்கு வாக்குகள் பெற்று அவரது ஆட்கள் மூலம் மொத்தமாக கொண்டுவந்து, இதற்கான பெட்டியில் போட்டாலும் கேட்பவர் யார்? தேர்தலில் பணியாற்றியவர்கள் தங்கள் வாக்குகளை அச்சமின்றி, பலவந்தம் ஏதுமின்றி, தனிஅறையில் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து, அப்போதே பெட்டியில் போடச் செய்திருந்தால் என்ன? எங்கேயோ, ஏதோ இடிக்கிறதே... சந்தேகம் வலுக்கிறதே...??

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!