Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, April 6, 2011

அருண் ஜேட்லிக்கு, ஸ்டாலின் அதிகார பதில்!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வந்தால்தான் சில அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியே வருகின்றனர். மற்ற காலங்களில் அவர்கள் ஓய்வெடுப்பதையே தங்களது முழுநேர வேலையாக்கிவிட்டனர். எதிர்க்கட்சியான அதிமுக-வுடன் தேமுதிக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. சினிமாவில்தான் விஜயகாந்த் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் அரசியலை பொருத்தவரையிலும் அவர் வில்லன்போல் செயல்படுகிறார். அரசியல் நாகரீகம் என்பது தேமுதிக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிடமும் இல்லை.

திமுக.வை பொருத்தவரை கடந்த 5 ஆண்டுகளாக முதல்வர் கருணாநிதி செய்த நலத் திட்டங்களை மையப்படுத்தி வாக்குகளைக் கேட்கிறோம். அதிமுக-வும் தான் தமிழகத்தில் 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது. ஆனால் அந்த ஆட்சி காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எந்தவொரு நலத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாகத்தான் திமுக தலைவர் கருணாநிதி மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தனி நபர் விமர்சனங்களை ஜெயலலிதா வீசி வருகிறார்.

திமுக தலைமையில் நடப்பது குடும்ப ஆட்சிதான். முதல்வர் கருணாநிதி தமிழக மக்கள் அனைவரையும் தங்களது குடும்ப உறுப்பினராகக் கருதித்தான் பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். 108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஆகிய இரு திட்டங்கள் மட்டும் தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

இவை தவிர, திருமண உதவித் திட்டம், சத்துணவில் வாரத்துக்கு 5 முட்டைகள் திட்டம், கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை திட்டம் என பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் எல்லாம் கடந்த 2006-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தத் தேர்தலில் சொன்னதுபோல் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். சொல்லாத பல நல்ல திட்டங்களையும் நிறைவேற்றிவிட்டோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, மக்கள் நலன் காக்க பல்வேறு நலத் திட்டங்களை தந்த திமுக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!