Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, April 3, 2011

தேர்தல் ஜுரத்தில் அரசியல் கட்சிகள்!!

தேர்தல் நாள் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் ஆர்ப்பரிக்க முடியாத சூழ்நிலையில் சிக்கியுள்ளன. தங்களது அணிக்கு பெரும்பான்மை கிடைத்து, ஆட்சி அமைக்க முடியுமா? என்ற கலக்கத்தில் கட்சித் தலைவர்கள் உள்ளனர்.

முதல்வர் கருணாநிதி, முதல் கட்டமாக கோவை, ஈரோடு, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டங்கள் மூலம் பிரசாரம் செய்து முடித்துள்ளார். இன்று வடசென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை (5ம் தேதி) சென்னை தீவுத்திடலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார்.இரண்டாம் கட்டமாக தென்சென்னை, மதுரை, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருவாரூர் ஆகிய இடங்களில் கருணாநிதி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தி.மு.க.,வுக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, கடந்த 26ம் தேதி முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் துவக்கினார். கடந்த 1ம் தேதி சென்னையில் அதிவிரைவு பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று மதுரையிலும், நாளை முதுகுளத்தூர், பரமக்குடி, காரைக்குடி, மதுரை, கோவை பகுதியில் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகள் பிரசார மேடையில் ஏறி, இறங்குகின்றனர்.

இரு அணியிலும் தலைவர்கள் பிரசாரம் சூடுபிடித்திருந்தாலும் எந்த அணிக்கும் வாக்காளர்களின் ஆதரவு அலை வீசவில்லை. இலவச திட்டங்களை தி.மு.க.,வை போல அ.தி.மு.க.,வும் அறிவித்திருப்பதால் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையையும் பொதுமக்கள் சரிசமமாக கருதுகின்றனர்.

தேர்தல் பணியில் இரு அணிகளின் தொண்டர்களும் களத்தில் காணப்படுகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதில் தேர்தல் கமிஷன் தீவிரமாக இருப்பதால், கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலை நீடிக்கிறது. தவிரவும், பா.ஜ., - இந்திய ஜனநாயகக் கட்சி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் களத்தில் இருப்பதால், எந்த அணிக்கு இது வாய்ப்பைக் குறைக்கும் அல்லது சாதகமாக்கும் என்ற குழப்பமும் இருக்கிறது.

தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், இலவச "டிவி', காஸ், ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்றவை ஆளுங்கட்சிக்கு ஆதரவை பெற்றிருந்தாலும், ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், இந்த பிரச்னைகள் எல்லாம் அ.தி.மு.க., அணிக்கு ஆதரவாக மாறுமா? என்பதிலும் தெளிவு இல்லை.மேலும், தொகுதி சீரமைப்பு, அந்தந்த பகுதியின் வளர்ச்சி நிலைமை, வேட்பாளரது பின்புலம் போன்றவற்றை வைத்து ஓட்டுப் போடும் நிலை இருப்பதாக, பலரும் கருதுகின்றனர்.

மேலும், தேர்தல் கமிஷன் கெடுபிடி செய்வதாக ஆளும் தி.மு.க., கூட்டணி வெளிப்படையாக குறைகூறுவது, இத் தேர்தலில் வித்தியாசமான அம்சமாகும். "நியாயமற்ற செயலில் ஈடுபடுவதாக' முதல்வர் குற்றம்சாட்டியிருக்கிறார். எதிரணியில் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்யப்போவதில்லை என்பதும் வெளிப்படையாகியிருக்கிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!