Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, April 1, 2011

ஈழப் (இனப் ) படுகொலை செய்தவனை இந்தியாவுக்குள் அனுமதியா?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வரும் இலங்கை அதிபர் ராஜபட்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்க கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்ச, இந்தியாவுக்கு வருகை தருவது தமிழ்ச் சமூகத்தை வேதனைப்படுத்துவதாகும்.

பிரபாகரனின் தாயார் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நான் சென்றபோது, இந்திய எம்.பி., என்ற நிலையிலும் இலங்கை நாட்டுக்குள்ளேயே அனுமதிக்க முடியாது என தடைவிதித்தார். இந்திய அரசை அவமதிக்கும் வகையில் திருப்பி அனுப்பிய ராஜபட்ச இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தியா வருகிறார்.

இந்திய அரசை தொடர்ந்து அவமதித்து வரும் ராஜபட்சவை அவ்வப்போது சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் இந்திய அரசின் போக்கு வேதனைக்குரியதாகவும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது. சர்வதேசப் போர்க் குற்றவாளி என உலகின் பல நாடுகள் ராஜபட்சே மீது குற்றம்சாட்டுகிற நிலையில், இந்திய அரசு மட்டும் ராஜபட்சவை வரவேற்று ஊக்கப்படுத்துவது தமிழினத்தை மேலும் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்பதை மீண்டும் உறுதிபடுத்துகிறது.

சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபட்சவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வற்புறுத்துகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!