நியூயார்க் : நியூயார்க்கில் இருந்து வெளியாகும் டைம் வார இதழ் உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் இந்திய கிரிக்கெட் அணியின் மகேந்திர சிங் தோனிக்கு 52-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. டைம் இதழின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியிலில் இடம்பெற்றுள்ள இரண்டாவது விளையாட்டு வீரர் தோனி. கடந்த ஆண்டு டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சச்சின் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் ஒபாமா 87-வது இடத்திலும், ஆர்ஜென்டீனாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி 88-வது இடத்திலும் உள்ளனர். ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 43-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
டைம் இதழில் கூறப்பட்டிருப்பதாவது, தோனி, இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனாக உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளார். பணிவான குணம், பதற்றமில்லாமல் நம்பிக்கையோடு விளையாடுவது ஆகியவற்றாலேயே அவரை அனைவரும் விரும்புகின்றனர்.
அவரின் திறமை பிரமிக்க வைக்கிறது. இந்தியாவில் சாதனை படைத்தவர்கள் எல்லாமே மிகப்பெரிய குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள். ஆனால் தோனி இவை எதுவும் இல்லாமல் சிறிய நகரில் இருந்து வந்த தனது திறமை ஒன்றால் மட்டுமே சாதித்தவர்' என்று எழுத்தாளர் சேதன் பாகத் தெரிவித்துள்ளார்.
தோனி கிரிக்கெட் அணிக்கு தலைமை மட்டும் வகிக்கவில்லை. நம்பிக்கையான கேப்டன் என்ற பெயரையும் பெற்றுள்ளார். அவர் இந்தியாவிற்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்ததோடு, வெற்றிபெறுவதையும் கற்றுக்கொடுத்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment