Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, April 23, 2011

அறிமுகம் ஆன்லைனில், சிலிண்டர் புக்கிங்!

அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக சமையல் கியாஸ் உள்ளது. சமையல் கியாஸ் கேட்டு விண்ணப்பித்து வீட்டிற்கு வந்து சேரும் வரை பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

கியாஸ் ஏஜென்சிகளின் டெலிபோன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புக் செய்வதற்குள் கியாஸ் தீர்ந்து விடும். எப்போது போன் செய்தாலும் “பிசி”யாக இருப்பதால் சிலிண்டருக்கு பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

பதிவு செய்வதற்கு பெரும் பாடுபட வேண்டி உள்ளது. அதனால் கியாஸ் ஏஜென்சிக்கே நேரில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. பொதுமக்கள் சமையல் கியாஸ் பெறுவதற்கு படக்கூடிய பல்வேறு சிரமங்கள் குறித்து எண்ணை நிறுவனங்களுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து ஆன்லைனில் கியாஸ் புக்கிங் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு 25-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் அல்லது செல்போன் மூலமாக இண்டேன் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற பத்து இலக்க எண்ணை அழுத்தி பதிவு செய்யவேண்டும். இந்த எண் அனைத்து இண்டேன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். அதன் பின்னர் ஒவ்வொன்றாக அழுத்தி நடைமுறைப் படுத்தவேண்டும்.

தமிழ் வழியில் பதிவு செய்ய எண்-1, ஆங்கில வழியில் பதிவு செய்ய எண்-2 அழுத்த வேண்டும். நுகர்வோர் எண், செல்போன் எண், வினியோகஸ்தர் எண் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக பதிவு செய்யவேண்டும். இவ்வாறு 8 நடைமுறைகளை பின்பற்றினால் வாடிக்கையாளர்கள் பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்படும். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை.

இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் கியாஸ் புக்கிங் செய்யலாம். தாங்கள் விரும்பிய நேரத்தில் பதிவு செய்து கொள்ள முடியும். இதேபோல எச்.பி. கியாஸ் வாடிக்கையாளர்கள் 9092223456 என்ற எண் மூலம் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் கியாஸ் பதிவு செய்வதில் பெண்கள், வயதானவர்கள், படிக்காதவர்கள் சிரமப்படுகிறார்கள். அவர்கள் எளிதாக பதிவு செய்வதற்கு வழிமுறைகளை கியாஸ் ஏஜென்சிகள் வழங்கி வருகிறார்கள். இந்த திட்டம் சென்னையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. படிப்படியாக மற்ற நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.

1 comments :

பயனுள்ள பதிவு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!