Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, April 5, 2011

நீலிக்கண்ணீர் வடிக்கும் வடிவேல்? மன்சூர்!

வடிவேலு அரசியல் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் விஜயகாந்தை தரக்குறைவாக பேசி வருகிறார். வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரால் ஏற்பட்ட பிரச்சினையை பேசி தீர்க்காமல் கோர்ட்டு வரை சென்று இப்போது அதனை வைத்து நடிகர் வடிவேல் அரசியல் மூலம் பழி வாங்குகிறார்.

வடிவேலுவிடம் 2 வருடத்திற்கு முன்பு இதுபற்றி பேசி இருக்கிறேன். நடிகர்கள் ஒரு தெருவில் வாழ்பவர்கள். அவர்கள் மற்றவர்களுக்கு பலியாகி விடக் கூடாது. தேர்தல் இன்னும் 4 நாட்களில் முடிந்து விடும். அதன் பின்னர் நாம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் நிலை வரும். அண்ணன் விஜயகாந்த் குடியரசு தலைவரால் சிறந்த குடிமகன் விருது வாங்கி உள்ளார்.

32 இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்தவர். என்னை போன்ற பலரையும் அறிமுகம் செய்தவர். அவர் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த காலம் பொற்காலம். கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டு கொண்டு வந்தவர். ஒரு கலைஞனை சக கலைஞனான வடிவேலு கீழ்தரமாக விமர்சித்து பேசுவது வேதனையானது. அரசியலில் நடிகர்களை பயன்படுத்தி விட்டு துடைத்து போட்ட கல் போன்று தூக்கி எரிந்து விடுவார்கள்.

நடிகர் வடிவேலு காழ்ப்புணர்ச்சியை கைவிட வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக வடிவேலு ராமேசுவரத்தில் நடந்த கூட்டத்தில் உணர்ச்சி பூர்வமாக பேசினார். ஆனால் இப்போது நான் போட்டியிடும் ஆலந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்க உதவிய காங்கிரசை ஆதரித்து பேசுகிறார். அப்படியானால் ஈழத் தமிழர்களுக்காக வடிவேலு அன்று வடித்தது நீலிக் கண்ணீரா? நடிகர் விஜயகாந்தை 20 வருடங்களாக எனக்கு தெரியும். 18 படங்களில் அவருடன் நடித்து உள்ளேன்.

1 comments :

அருமையா சொன்னேங்க

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!