கர்ப்பமாக இருக்கும் போது உங்கள் எடை அதிகரிக்கும். அதை சமாளிக்கவும், பிரசவத்தின் போது ஏற்படும் வலியை சமாளிக்கவும் உடற்பயிற்சி செய்வது அவசியம். குழந்தை பிறந்த பிறகு உங்களது பழைய உடற்கட்டை மீண்டும் பெற இந்த உடற்பயிற்சி உதவும்.
உற்சாகமான மனநிலையுடன் இருக்கவும் கர்ப்பத்தின் போது ஏற்படும் மனத்தொய்வை தவிர்க்கவும் உடற்பயிற்சி உதவும். நடப்பது, நீச்சல் மற்றும் யோகா போன்ற எளிதான, மென்மையான உடற்பயிற்சிகளை செய்யவும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் தும்மும் போதோ, சிரிக்கும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ சிறிய அளவில் சிறுநீர் கசிவு ஏற்படுவது சாதாரணமான ஒன்று. இடுப்பிற்கான உடற்பயிற்சிகளை கர்ப்பமாகும் முன்பே செய்யத் துவங்கி கர்ப்ப காலத்தின் போதும் தொடர்ந்து செய்து வந்தால் இதை தடுக்கலாம்.
* மேலும் சிசரினிலிருந்து தவிர்க்கலாம்., இதைப் பற்றி மேலும் அறிய உங்கள் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.
0 comments :
Post a Comment