ஆந்திராவுக்கு மாணவர் விசாவில் வரும் வெளிநாட்டவர்கள், அங்குள்ள ஏழை பெண்களை திருமணம் செய்து கொண்டு, தாயகம் திரும்பும் போது, விவாகரத்து செய்து விட்டு செல்கின்றனர்.
ஐதராபாத்துக்கு வரும் சூடான், சோமாலியா உள்ளிட்ட நாட்டவர்கள், அங்குள்ள ஏழை இளம் பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்துக்கு முன்பாக, அந்த பெண் குடும்பத்தினரிடம் வெற்று தாளில் கையெழுத்து வாங்கி கொள்கின்றனர். ஏழை மைனர் பெண்களை திருமணம் செய்து வைக்க புரோக்கர்களும் அதிக அளவில் இங்கு உள்ளனர்.
இவர்கள், வெளிநாட்டவர்களிடம், 50 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் பெற்றுக்கொண்டு, மைனர் பெண்களை திருமணம் செய்து வைக்கின்றனர். ஐதராபாத்தில் தங்கியிருக்கும் காலம் வரை இந்த பெண்களுடன் வாழும் வெளிநாட்டவர்கள், தாயகம் திரும்பும் போது இந்த பெண்களை விவாகரத்து செய்து விட்டு செல்கின்றனர்.ஆந்திர போலீசார் சமீபத்தில் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சூடான் நாட்டு மாணவர்கள், புரோக்கர்கள் உட்பட, ஆறு பேரை கைது செய்தனர். சமீபத்தில் இது போன்று ஏழு சம்பவங்கள் நடந்துள்ளன.
மைனர் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு நபர்கள், தங்கள் நண்பர்களுடன் இந்த பெண்களை பாலியல் ரீதியாக பகிர்ந்து கொள்ளும் கொடுமையும் நடக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன், இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு நபர், தன் நண்பருடன் சேர்ந்து பாலியல் கொடுமை செய்ததால், அப்பெண், அவர்களிடமிருந்து தப்பி வந்து போலீசில் சரணடைந்தார்.
ஐதராபாத் துணை போலீஸ் கமிஷனர் வினித் பிரிஜ்லால் இது குறித்து குறிப்பிடுகையில், "வெளிநாட்டில் பெரிய செல்வந்தர் எனக்கூறி ஏழை இளம் பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களை குறுகிய காலத்தில் விவாகரத்து செய்யும் நிகழ்ச்சி அதிகளவில் நடக்கிறது.
0 comments :
Post a Comment